தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை இருக்கு.. லிஸ்ட்டில் உங்கள் மாவட்டம் இருக்கானு பாருங்க பாஸ்!
சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளளது.
Recommended Video
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, வேலூர், திருவண்ணாமலை, தேனி, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் மாலை நேரங்களிலும் இரவிலும் அதிக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

காற்றின் திசை
இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

லேசான மழை
அந்த வகையில் கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டையிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

நீலகிரி மாவட்டம்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவானது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

புயல் கரையை கடக்கும்
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் உள்ள ஆம்பன் புயலால் நேற்றைய தினம் சில இடங்களில் மழை பெய்தது. சென்னையிலும் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. நாளை மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே ஆம்பன் புயல் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications