10 வயது சிறுவனை காவு வாங்கிய டெங்கு காய்ச்சல்.. சென்னையில் சோகம்
சென்னை: பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவாரம் தொடர் சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சக்தி சரவணன்(10) பலியானார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிழந்தார். ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி பலியானார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின வழிகாட்டுதலின் படி டெங்கு பரவலைக் குறைக்க எல்லா மாநிலங்களும் தீவிர நடிவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சக்தி சரவணன் என்ற 10 வயது சிறுவன் இன்று காலையில் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரத்த அணுக்கள் குறைந்து வந்ததாக தெரிகிறது. ஒரு வாரம் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சிறுவன், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த மாதம் தருமபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் ஏற்கனவே 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications