Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 சவரன் தங்க நகை.. 3 மனைவிக்கும் தங்கத்தை கொட்டிய ஞானசேகரன்.. கூகுள் மேப் மூலம் அரங்கேறிய கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, கார், ஜீப் போன்றவைகளை பறிமுதல் செய்துள்ள நிலையில், இப்போது சுமார் 100 சவரன் நகைகளையும் ஞானசேகரனிடமிருந்து பள்ளிக்கரணை போலீசார் மீட்டுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில், கோட்டூர்புரத்தை சேர்ந்த, ஞானசேகரன் என்ற 37 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர், சென்னை பள்ளிக்கரணை பகுதிகளில், சொகுசு பங்களாக்களை குறி வைத்து, நகை, பணம் கொள்ளை அடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

100 Sovereigns Gold Jewellery gnanasekaran 100

அதிர வைக்கும் வாக்குமூலங்கள்

இதுதொடர்பாக, பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், ஞானசேகரனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து ஞானசேகரன் கொள்ளையடித்ததாக வாக்குமூலம் தந்துள்ளதாக அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக, சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் பின்பக்கம் சென்று கொள்ளை அடித்து வந்துள்ளார்.. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக எப்போதுமே சொகுசு காரில் சென்றுதான், கொள்ளை அடிப்பாராம். கடந்த 2022ல் பள்ளிக்கரணையில் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கும்போது வெளி மாநில கூட்டாளி ஒருவரை ஞானசேகரன் பயன்படுத்தியிருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலையில் பிரியாணி கடை - இரவில் கொள்ளை

கடந்த 2019ல் கானத்தூர், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் 16க்கும் மேற்பட்ட கேஸ்கள் இவர் மீது பதிவாகியிருக்கின்றன.. ஜெயிலுக்கு சென்றுவந்த பிறகு திருந்தி வாழப் போவதாக சொல்லிவிட்டு, பிரியாணி கடையை நடத்தியிருக்கிறார்..

ஆனாலும், பழைய பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல், காலையில் பிரியாணி கடை நடத்திவிட்டு, நள்ளிரவில் காரில் சென்று சென்னை புறநகர் பகுதிகளில் திருட்டு தொழிலில் ஞானசேகரன் ஈடுபட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தவகையில், பள்ளிக்கரணை பகுதியில் மட்டும் 7க்கும் மேற்பட்ட வீடுகளை நோட்டமிட்டு 250 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலத்தில் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

பாலியல் சீண்டல்கள்

இந்த வாக்குமூலத்தையடுத்து, ஞானசேகரனை 7 கொள்ளை வழக்கிலும் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதுவரை சுமார் 100 சவரன் நகைகளை ஞானசேகரனிடமிருந்து மீட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கார், ஜீப் போன்றவைகளை பறிமுதல் செய்துள்ள நிலையில், இப்போது சுமார் 100 சவரன் நகைகளை பள்ளிக்கரணை போலீசார் மீட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, எப்போதுமே கொள்ளையடிக்கும்போது அங்குள்ள பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவாராம் ஞானசேகரன்.. இதையும் வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.. எனவே, அப்படி யாரேனும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது தொடர்பாகவும். மேலும், 150 சவரன் நகையை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்தும், பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 மணி நேரம் மட்டுமே கொள்ளை

முன்னதாக போலீசாரிடம் ஞானசகேரன் அளித்துள்ள வாக்குமூலத்தில், "எனக்கு 3 மனைவியர். அவர்களுக்காகவும், சொந்த வீடு கட்டவும், நகை, பணம் திருட்டில் ஈடுபட்டு வந்தேன்.. கூகுள் மேப் வாயிலாக, பள்ளிக்கரணை பகுதியில், சொகுசு வீடுகளை அடையாளம் கண்டு, அந்த இடங்களுக்கு ஆட்டோ மற்றும் ஜீப்பில் சென்று நோட்டமிடுவேன். பூட்டி கிடக்கும் வீடுகளில், மாலை, 5 முதல் இரவு 9 மணிக்குள், நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி விடுவேன்.

நீலாங்கரை, கானத்துார் பகுதிகளில் உள்ள வீடுகளிலும், நகை, பணம் கொள்ளையடித்து கைதாகி, சிறை சென்று வந்துள்ளேன். போலீசாரிடம் திருந்தி வாழ்வதாக கூறிவிட்டு, அண்ணா பல்கலை அருகே பிரியாணி கடை நடத்தி வந்தேன்.

ஆனாலும், என் திருட்டு தொழிலை விடவில்லை. கொள்ளை அடித்த நகை, பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தேன். என் கூட்டாளிகளுக்கும் பணத்தை வாரி வழங்கி உள்ளேன். கொள்ளையடிக்கும் நகையில், மூன்றில் ஒரு பங்கை என் மனைவியருக்கும், மற்ற இரண்டு பங்கை எனக்கும், தாய்க்கும் என, பங்கு பிரித்து கொள்வோம்" என்று வாக்குமூலம் தந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+