கோடை காலத்தில் சீரான மின்சாரம்..எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும் ..செந்தில் பாலாஜி விளக்கம்

எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஒரே மின் இணைப்பு எண்ணாக மாற்ற வேண்டும் என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

அனைத்து மின் இணைப்புகளுக்கும் தொடர்ந்து 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோடைக்காலமாக இருந்தாலும் மின் தேவை அதிகமாக இருந்தாலும் தொடர்ந்து 18 மணி நேர மின்சாரம் வழங்கப்படும்.

 மும்முனை மின்சாரம் வழங்க

மும்முனை மின்சாரம் வழங்க

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை பொறுத்தவரை ஏறத்தாழ இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொழிற்சங்கள் கொடுத்த கோரிக்கைகள் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழலிலே இருக்கிறது. வரக்கூடிய இரண்டு மூன்று வாரங்களில் அது முழு வடிவம் பெறும். ஒப்புதலோடு நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு கோடைக்காலம் வருவதற்கு முன்பாக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான பணிகளை மின்சார வாரியம் தொடங்கியிருக்கிறது.

 100 யூனிட் இலவச மின்சாரம்

100 யூனிட் இலவச மின்சாரம்


அனல் மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி பொறுத்தவரை 11 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால், நிலக்கரி பற்றாக்குறை எதுவும் இல்லை. எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். ஒரே மின் இணைப்பு எண்ணாக மாற்ற வேண்டும் என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரு குடியிருப்பில் பெற்றிருந்தாலும் அது இணைக்கப்பட மாட்டாது.

12 மணி நேரமும்...

12 மணி நேரமும்...

ஏற்கனவே என்னநடைமுறை உள்ளதோ.. அதே செயல்முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அந்த நிதியை அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு டெல்டா பகுதிகளில் 12 மணி நேரமும், பிற இடங்களில் 9 மணி நேரமும் மும்முனை மின்சார வழங்கப்படுவதாக கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

 கோடைக்காலத்தில் சீரான மின்சாரம்

கோடைக்காலத்தில் சீரான மின்சாரம்

தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் 24 மணிநேரம் வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது விவசாயிகள் நலன் குறித்து பேசப்படுகிறது. தற்போது மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. குறிப்பாக கோடைக்காலத்தில் சீரான மின்சார வினியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சார வழங்குவதாக இருந்தால் வினியோகத்திற்கான அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

18 மணிநேரம் வழங்க..

18 மணிநேரம் வழங்க..

ஏற்கனவே உற்பத்தி அதிகரிக்கும் சூழல் இருந்தாலும், கட்டமைப்பை வலுப்படுத்த 314 துணை மின்நிலையங்கள் அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு காலை 6 மணியில் இருந்து 8 மணி வரையிலும், மாலையில் 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும் 6 மணி நேரம் 2 முனை மின்சாரம் மீதம் உள்ள 18 மணி நேரத்திற்கு 18 மணிநேரம் மின்சார வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து உள்ளது. கடந்த ஆட்சியில் 12 மணிநேரம் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் தற்போது 18 மணிநேரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.அடுத்த ஆண்டு கோடைக்காலத்திற்கு முன்பாக 24 மணிநேரம் மும்முனை மின்சார வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+