Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அக்னிபரீட்சை"யில் திமுக அரசு.. "புலி" வாலை பிடிச்சிட்டீங்களோ? கழுகுக்கண் கட்சிகள்.. பெரிய சேலஞ்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை ஒருவழியாக அமலுக்கு வந்துள்ளது.. எனினும், தெரிந்தோ, தெரியாமலோ, திமுகவுக்கு மிகப்பெரிய அக்னி பரீட்சையாக இந்த திட்டம் அமைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

மகளிருக்கு 1000 ரூபாய் என்று, தன்னுடைய வாக்குறுதியில் திமுக அறிவித்தபோதே, பலருக்கும் மகிழ்ச்சிக்கு பதிலாக, சந்தேகம்தான் அதிகமாக கிளம்பியது.. தமிழகம் முழுவதுமுள்ள பெண்களுக்கு 1000 ரூபாய் என்பது சாத்தியமா? என்பதே அந்த சந்தேகம்.

1000 rs Magalir Urimai Thogai and Are these the problems facing the DMK government

எடப்பாடி பழனிசாமி: அதற்கு பிறகு ஒருவருடம் ஆட்சிக்காலம் முடிந்தபிறகும், இந்த திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.. இங்குதான் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியலை துவங்கின.. வாக்குறுதிகள் எங்கே என்று கேட், விடியா அரசு என்ற முழக்கத்துடன் வந்தார் எடப்பாடி பழனிசாமி.. இதற்கு பிறகு, சட்டசபையில் இந்த திட்டத்தை பிடிஆர், சில விதிமுறைகளுடன் அறிவித்ததுமே அடுத்த அதிர்ச்சி கிளம்பியது.

இந்த இடத்திலும் எதிர்க்கட்சிகள், தங்கள் கேள்விகளை முன்வைத்தன.. "தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது... ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை" என்றார் எடப்பாடி பழனிசாமி.

வானதி கேள்வி: அதுபோலவே, அமமுகவும் கேள்வியை கேட்டது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார் டிடிவி தினகரன்.. "எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்று கேட்டிருந்தார்" பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.

ஆனால், நாம் தமிழர் கட்சியின் சீமான் கேட்ட கேள்வி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. "உரிமைத்தொகையை பெற வேண்டுமானால், ஆன்லைனில் எப்படி கூலித்தொழிலாளியால் விண்ணப்பிக்க முடியும்? நாங்கள் பிச்சைக்காரியா இருக்கனும் அவ்வளவுதானே? இதெல்லாம் இருந்தால் நாங்கள் எதற்கு உங்களிடம் 1000 ரூபாய் கேக்க வேண்டும்? நிலம் இருக்கக்கூடாது, வருமானம் இருக்கக்கூடாது என்று சொல்லி மக்களை அவமானப்படுத்தாமல் விட்டிருக்கலாம்" என்று சீமான் பேச்சுக்கு ஆதரவுகளும் திரண்டதை மறுக்க முடியாது.

எனினும், இந்த உரிமைத்தொகை திட்டமானது, முழுக்க முழுக்க சாதகமான அம்சங்களை அடங்கியது மட்டுமே என்று சொல்லமுடியாது.. அனைவருக்கும் 1000 ரூபாய் கிடைக்கும் என்ற மனநிலையில் இருந்த பெண்களுக்கு, தமிழக அரசின் இந்த வரையறைகள், ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதையும் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.

பயன்பாடுகள்: சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்றவற்றை வைத்திருப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என்பது வரவேற்கப்பட்ட விஷயம் என்றாலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் என்பது எந்தளவு சரியாக இருக்கும்? ஒரு ஆணின் வருவாயை வைத்து, மகளிர் தகுதியை எப்படி வரையறை செய்துவிட முடியும்? என்ற சந்தேகமும் சூழ்கிறது.

உண்மையான பயனாளர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைக்கும் என்று அரசு சொல்கிறது என்றாலும், வருமான சான்றிதழோ, நிலம் சம்பந்தமான ஆவணங்களோ சமர்ப்பிக்காமல், ஒருவரை எப்படி தகுதியானவர் என்று அடையாளம் காட்ட முடியும்? பொருளாதார தகுதிகளுக்காக தனியாக வருமான சான்று தேவையில்லை என்று கூறியிருப்பது சில முறைகேடுகளுக்கு வழிவகுத்துவிடுமே? என்ற கலக்கமும் கவ்விக்கொண்டுள்ளது.

சாத்தியமா? : இந்த திட்டத்தை எப்படி முறைப்படுத்த போகிறது அரசு? எப்படி திட்டமிடப்போகிறது? வீடு வீடாக சென்று நேரடி ஆய்வு என்பது சாத்தியமா? என்பதெல்லாம் மிகப்பெரிய குழப்பமாக இருந்தது. ஆனால், இந்த சவால்களை, மிகச்சரியான திட்டமிடலுடன், திமுக அரசு செயல்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.. இதில், அதிகாரிகள், ரேஷன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என ஒவ்வொருவரின் பங்கும், அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.

இந்த திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.. ஒட்டுமொத்த திமுக கூடாரமே மகிழ்ச்சியில் திளைத்து காணப்படுகிறது.. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், சிறிய டவுன்களில் கூட, முதல்வர் ஸ்டாலின் போட்டோவுடன் மகளிர் உதவித்தொகை கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன... அதேசமயம், ஒருவேளை பல பயனாளி பெண்களுக்கு, உரிமைத்தொகை கிடைக்காவிட்டால், திமுகவுக்கு இதுவே பின்னடைவாகவும் பார்க்கப்பட்டுவிடும்.

பெண்கள் வாக்குகள்: பலன் கிடைக்காத பெண்களிடமிருந்து பொருமல்களையும், அதிருப்திகளையும் எதிர்நோக்கியே, எதிர்க்கட்சிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இதைவைத்து, திமுக மீதான விமர்சனத்தையும் பூதாகரமாக்க காத்து கொண்டிருக்கிறார்கள்.. அதிலும் அதிமுக இந்த விஷயத்தில் படுமும்முரமாக உள்ளது. காரணம், அதிமுகவுக்கு எப்போதுமே பெண்களின் வாக்குகள் அதிகம்.

இந்த உரிமைத்தொகை விஷயத்தில், வாக்குகளை திமுகவுக்கு விட்டுத்தர அதிமுக தயாராக இல்லை.. அதனால், விண்ணப்பித்த பெண்களில் கணிசமானோருக்கு உரிமைத்தொகை கிடைக்காவிட்டாலும் இந்த விஷயத்தை அதிமுக விடப்போவதில்லை.. அதிமுகவே தீவிர எதிர்ப்பில் உள்ளபோது, அண்ணாமலையும் நிச்சயம் விடப்போவதில்லை..

காய்நகர்த்தல்: ஆக, திமுகவுக்கு இப்போது சிக்கல் என்னவென்றால், உரிமைத்தொகையை வழங்கியும்கூட கெட்ட பெயருக்கு உள்ளாக வேண்டிவரும்.. உரிமைத்தொகையை வழங்கியும்கூட, ஓட்டுக்களை பிரதானமாக அள்ள முடியாது. அதனால், இந்த விஷயத்தில் மிகச்சரியான காய்நகர்த்தலை அரசு மேற்கொள்ள வேண்டி உள்ளது..

தேர்தல் சமயத்தில், இந்த திட்டத்தை நிறைவேற்றாமல், இப்போதே நிறைவேற்றியுள்ளது திமுகவுக்கு ஆறுதலான விஷயம் என்றாலும், ரொம்பவே கவனமாக தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகையை வழங்க வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.. அதேசமயம், தேர்தலில் வெற்றியையும் தேடித்தர வேண்டிய பெரிய பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கும் கூடியிருக்கிறது.

சவால்: அதைவிட முக்கியமாக, இந்த திட்டத்தின் மூலம் திமுகவினர் மட்டுமே பலன் அடைவார்கள் என்ற எண்ணத்தை ஆழமாக வேரூன்றியிருக்கும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் முறியடிக்க வேண்டி உள்ளது.. மொத்தத்தில், தமிழக மக்கள் அனைவருக்குமான அரசாக, இந்த திமுக அரசு உள்ளது என்ற பெயரை சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+