Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இதை" போய் அங்கே கேளுங்க.. "பால் பாயாசம்"ன்னு நினைச்சீங்களா.. இதற்கு பெயர் அறம்.. ஆத்திரப்பட்ட திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: "1000 ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்று கேட்கும் கும்பலுக்கு, ஆயிரம் ரூபாய் கூட இல்லாதவரிடம் அதை போய் கேளு" என்று கோபப்பட்டுள்ளது திமுகவின் முரசொலி.

தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பானது சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார்.

 வேதனை வானதி

வேதனை வானதி

தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது... ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பி வருகிறது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேட்கிறார் டிடிவி தினகரன்.. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்று பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் கேட்டு வருகிறார்.

 இழி அரசியல்

இழி அரசியல்

1000 ரூபாயை எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வீர்கள் என்று இந்த அனைத்து எதிர்க்கட்சியினரும் கேள்வியை கேட்டு வரும்போது, நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும், இதைவிட ஒருபடி மேலே போய், "எங்கள் வீட்டு பெண்களுக்கு உரிமை தொகைக்கான தகுதியை நிர்ணயிக்க நீ யார்?" தேர்தல் வாக்குறுதியில் தகுதி என்ற வார்த்தையே இல்லையே ஏன்? என்று கேள்வி வருகிறார்.. இப்படியான விமர்சனங்களும், வாதங்களும், குற்றச்சாட்டுகளும், அரசியல் தளத்தில் வெடித்து வருகிறது.. மொத்தத்தில், அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய வலியுறுத்தலாக இருந்து வருகிறது.

தலையங்கம்

தலையங்கம்

இந்த உரிமைத்தொகை 1000 ரூபாய் யார் யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து, திமுக தரப்பில் அடிக்கடி விளக்கங்கள் கூறி தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது.. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் இதுவரை நிற்கவில்லை.. இந்நிலையில்தான், இதுகுறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி இதுகுறித்து ஒரு தலையங்கத்தை வெளியிட்டு, காட்டமான கேள்வியையும் கேட்டுள்ளது.. அந்த தலையங்க கட்டுரையில், "ஒரு கோடி பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு எடுத்திருக்கிறது. இதற்காக 7,000 கோடியை நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று முதல்வர் அறிவித்ததும், அனைவருக்கும் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.

 டிப்ஸ் பாக்கெட் மணி

டிப்ஸ் பாக்கெட் மணி

மாதம் ஆயிரம் ரூபாய் என்பது யார் யாரின் முகத்தில் எல்லாம் மலர்ச்சியை ஏற்படுத்துமோ அவர்கள் அத்தனை பேருக்கும் இந்தத் திட்டம் பலன் கொடுக்கும் என்று முதல்வர் விளக்கம் அளித்திருக்கிறார். ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டாலும் பதில் ஒன்றுதான். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என்று நம்பும் எந்த குடும்பத் தலைவியையும் இந்த திராவிட மடல் அரசு கைவிட்டு விடாது என்று என்கிறார் முதல்வர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்தத் திட்டம் பசித்த வயிறுகளுக்கான சோறு தானே தவிர, எல்லாம் சாப்பிட்டவர்களுக்கு தரப்படும் பால் பாயாசம் அல்ல. இது பெண்களுக்கான நன்கொடையோ பாக்கெட் மணியோ, டிப்ஸ் அல்ல.

 கலைஞர் - அடிபட்ட ஆடு

கலைஞர் - அடிபட்ட ஆடு

ஏதும் மற்றவர்களுக்கு உதவும் அறம். அந்த அறத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த திட்டம். ஆடுகளை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு விவசாயி, ஒரே ஒரு ஆட்டை மட்டும் தோளில் தூக்கிப் போட்டு சுமந்து வருவான். அது காலில் அடிபட்டு நடக்க முடியாத ஆடாக இருக்கும். அதற்கு பெயர் தான் சமூக நீதி என்று சொன்னவர் கலைஞர். அத்தகைய நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் இந்த திட்டம். வறுமை ஒழிப்பு திட்டங்கள் முழு பலனை தராமல் போனதற்கு காரணம் வறுமையில் உள்ள மக்களை மட்டுமே இனம் கண்டு அவர்களுக்கு தராமல் போனதுதான். எந்தத் திட்டமாக இருந்தாலும் அந்தத் திட்டம் என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்படுகிறது அந்த அடிப்படையிலேயே பயனாளிகளும் தீர்மானிக்கப்படுவார்கள்.

 ஆத்திரம் முரசொலி

ஆத்திரம் முரசொலி

ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தரப் போகிறது தமிழ்நாடு அரசு என்று ஊடகம் ஒன்று வசதியான பெண்களிடம் கேட்டபோது, இல்லாத ஏழை மக்களுக்கு இது பெரிய உதவியா இருக்கும் என்று தான் சொல்கிறார்கள். யாருக்கு பயனுள்ளது என்பது மக்களுக்கே தெரிகிறது. ஏழை குடும்ப பெண்களின் வருமான அளவை அதிகரிப்பதும் வறுமை விகிதத்தை குறைப்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கம். இவ்வளவு விளக்கத்திற்குப் பிறகும் கூட ஒரு கும்பல் கேட்கிறது ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும் என்று. ஆயிரம் ரூபாய் கூட இல்லாதவரிடம் அதை போய் கேள் என்பது தான் ஒரே பதில்" என்று ஆத்திரப்பட்டுள்ளது இருக்கிறது முரசொலி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+