Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களே ரெடி? வாக்களிக்க சொந்த ஊருக்கு கிளம்பிட்டீங்களா? ஸ்பெஷல் பஸ்கள் ரெடி.. சீட்டும் காலியாயிருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருகிற 19-ம் தேதி மக்களவை தேர்தலில் வாக்களிக்க முன்கூட்டியே சொந்த ஊருக்கு பயணிக்க போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகியிருக்கிறது.

பாராளுமன்ற தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும் நாளை மறுநாள் அதாவது 19-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.. காலையில் தொடங்கும் இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

10000 Special buses by Tamil Nadu Government and on election day operate for public to go to hometowns for voting

பிரச்சாரங்கள்: இதையடுத்து, தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது... எனவே, இன்று மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது.

பிரச்சாரம் ஓய்ந்ததும், இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும். மேலும் ஓட்டல்கள், விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.

பிரச்சாரம்: இதனிடையே, வாக்களிப்பதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும்வகையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

இன்று 17ம் தேதி மற்றும் நாளை 18-ம் தேதிகளில் சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படக் கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 970 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 7 ஆயிரத்து 154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முன்பதிவு: நாளை 18-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. நேற்று 16-ந் தேதிக்கான 30 ஆயிரத்து 630 முன்பதிவு இருக்கைகளில், ஆயிரத்து 22 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டும், 29 ஆயிரத்து 608 இருக்கைகள் காலியாகவும் இருந்தன.

இதுபோலவே, இன்று 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 18-ந் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க போக்குவரத்துத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+