இன்று தொடங்குகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. 9.55 லட்சம் பேர் பங்கேற்பு.. என்னென்ன ரூல்ஸ் பாருங்க
தமிழகம், புதுச்சேரியில் இன்று நடக்கிறது 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.. இதில், 9.55 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
Recommended Video
கடந்த 2 வருட காலமாகவே, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.. பிள்ளைகளுக்கு ஆன்லைன் மூலம்தான் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது பள்ளிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், பொதுதேர்வையும் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வி துறை தீவிரமான கவனத்தை செலுத்தியது.

நெறிமுறைகள்
அந்த வகையில், நேற்றைய தினம் பிளஸ் 2 தேர்வுகள் மாநிலம் முழுவதும் தொடங்கி உள்ளன.. நேற்று தொடங்கி 28 ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற உள்ளது.. அதேபோல இன்றைய தினம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதவுள்ளனர்.

சிறை கைதிகள்
குறிப்பாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் மட்டும், 16 ஆயிரத்து 802 மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுதும், 3,936 தேர்வு மையங்களும், தனி தேர்வர்களுக்கு, 147 மையங்கள் மற்றும் சிறை கைதிகளுக்கு 9 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்தேர்வு
முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக 51ஆயிரத்து 710 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 308 இடங்களில் கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள், 308 மையங்களில் இருந்து வினியோகம் செய்யப்படுகின்றன.தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ரிசல்ட் எப்போது?
பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் செய்யப்பட்டுள்ளது... 10ம் வகுப்புக்கான அனைத்து பாடத் தேர்வுகளும் வரும் 30ல் முடிகின்றன. ஜுன் 17ல் தேர்வு முடிவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications