பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அதிர வைக்கும் அரசு பள்ளிகள்! இத்தனை பள்ளிகளில் 100% தேர்ச்சியா?!
சென்னை : பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பத்தாம் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், 4105 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்று இருக்கின்றன. 1364 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்று அசத்தியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தனர்.

தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் - 91.55% ஆகவுள்ளது. கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 12,625 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எழுதியுள்ளனர். இவற்றில் 7491 மேல்நிலைப் பள்ளிகளும், 5134 உயர்நிலைப் பள்ளிகளும் அடங்கும்.0 இதில் 415 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. 1364 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.

பள்ளி வாரியாக தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும் பொழுது அரசு பள்ளிகள் 87.90 சதவீத தேர்ச்சியையும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 சதவீத தேர்ச்சியையும், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.
இதேபோல் இரு பாலர் பள்ளிகள் 91.93 சதவீத தேர்ச்சியையும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீத தேர்ச்சியையும் ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவீத தேர்ச்சியும் பெற்றிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications