10ஆம் வகுப்பு மார்க் ஷீட்டில் ஏதேனும் தவறா? திருத்தம் செய்ய உடனடி வாய்ப்பு.. யூஸ் பண்ணிக்கோங்க!
சென்னை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயர், விவரங்கள் ஆகியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால், அவற்றை திருத்தம் செய்ய தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அந்த மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், உயர்கல்வி, வேலை, பாஸ்போர்ட் எடுப்பது போன்ற பல விஷயங்களுக்கு அடிப்படைச் சான்றாக கருதப்படும். இதில் ஏதேனும் தவறு இருந்தால், கண்டிப்பாக மாற்ற வேண்டி வரும். எனவே தேர்வுத்துறை இயக்குநரகம் வழங்கியுள்ள வாய்ப்பை பயன்படுத்தி இப்போதே மாற்றிக் கொள்ளலாம்.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட உதவி தேர்வு இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் தலைப்பு எழுத்து, பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பள்ளியின் பெயர் ஆகியவற்றில் பிழை இருந்தால் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் சேர்த்து தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் செப்டம்பர் 8-ஆம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு திருத்தங்கள் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக உதவி இயக்குநர்கள் செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தனித்தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications