11 ஐஏஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை : தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சார் ஆட்சியர்கள், கூடுதல் ஆட்சியர்கள் உட்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேரன்மகாதேவி, மேட்டூர், குன்னூர், தருமபுரி, திண்டிவனம், பத்மநாபபுரம், பொள்ளாச்சி, சிவகாசி சார் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்
சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியராக இருந்த சி.ஏ. ரிஷப், திருவள்ளூர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேட்டூர் கோட்டாட்சியராக இருந்த வீர் பிரதாப் சிங், திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராகவும், குன்னூர் கோட்டாட்சியராக இருந்த தீபனாவிஸ்வேஸ்வரி தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டாட்சியர் - திட்ட இயக்குநர்
தருமபுரி கோட்டாட்சியர் சித்ரா விஜயன், விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராகவும், திண்டிவனம் கோட்டாட்சியராக இருந்த அமித் சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளராகவும், பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலர்மேல்மங்கை, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராகவும், பொள்ளாச்சி கோட்டாட்சியராக இருந்த தகாரே ஷுபம், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
சிவகங்கை கோட்டாட்சியராக இருந்த பிரித்விராஜ், நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராகவும், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக இருந்த சரவணன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராகவும், தொழில் வளர்ச்சி பிரிவின் நிர்வாக இயக்குநராக இருந்த சரயு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இணை நிர்வாக இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தலைமை செயலர் உத்தரவு
மேலும், தொழில் வளர்ச்சி கழக செயல் இயக்குநர் வந்தனா கார்க், கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications