அடுத்த அதிரடி.. 11 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்! புயல் போல அதிகாரிகளுக்கு ஆட்டம் காட்டும் தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவடி, கோவை, மதுரை மாநகராட்சிகளின் ஆணையர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்தவகையில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி ஆணையராக சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் சார் ஆட்சியராக இருந்த கட்டா ரவி தேஜா சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த தர்ப்பக ராஜ், உயர்கல்வித் துறையின் துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த கே.ஜே.பிரவின் குமார் சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞாஞதேவ்ராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி சார் ஆட்சியராக பணியாற்றி வந்த பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, முக்கியமான 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டிருந்தார். அதற்கு முன்பாக கடந்த 11ஆம் தேதியன்றும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications