தமிழ்நாட்டில் பேரிச்சம் பழம் சாகுபடி! ஏக்கருக்கு ரூ.12,000 மானியம்! தமிழக வேளாண் பட்ஜெட்!
சென்னை: தமிழ்நாட்டில் பேரிச்சைப்பழம் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.12,000 மானியம் வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் 2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது அறிவிப்பு வெளியிட்ட அவர், தூத்துக்குடி, வேலூர், தருமபுரி, கரூர் ஆகிய மாவட்டகளில் 250 ஏக்கர் பரப்பளவில் பேரிச்சை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பு வருமாறு;

பேரீச்சை சாகுபடி: இரும்பு சத்து அதிகமுள்ள பேரீச்சை சாகுபடியை தமிழ்நாட்டில் 250 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய, 30 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கப்படும்.
முந்திரி சாகுபடி: தமிழ்நாட்டில், முந்திரி இரண்டு இலட்சத்து ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டிற்கு சுமார் 43,500 மெட்ரிக் டன் முந்திரிப் பருப்பு உற்பத்தியாகிறது. மேலும், 4 இலட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு முந்திரி பதப்படுத்தும் வசதிகள் இருந்தும், அதற்கான மூலப்பொருளான முந்திரி 10 சதவீதம் மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, முந்திரி சாகுபடிப் பரப்பை அதிகரித்து உற்பத்தியை உயர்த்திட 2 கோடியே 36 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும், தரமான முந்திரியை விளைவிக்க இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், 2,470 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்கம் அமைத்திட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மிளகாய் பயிர் ஊக்குவிப்புத் திட்டம்: கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, 2,470 ஏக்கர் பரப்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் பயிரிடப்பட்டது. 2024 2025 ஆம் ஆண்டிலும், மிளகாய் மண்டலம் ஏற்படுத்தப்பட்ட பகுதிகளான இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க, 1,230 ஏக்கர் பரப்பில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு மிளகாய் சாகுபடி செய்யப்படும். மேலும், நெல், இதர தானியங்களின் அறுவடைக்குப்பின்பு, 3,700 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிரிட ஊக்குவிக்கப்படும்.

இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் 200 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கென, 3 கோடியே 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
மரவள்ளியில் மாவுப்பூச்சி: மரவள்ளி அதிகமாகப் பயிரிடப்படும் மாவட்டங்களில் ஏற்படும் மாவுப்பூச்சி தாக்குதலால் உற்பத்தி குறைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த உர, பூச்சி மேலாண்மைக்காக 21,000 ஏக்கருக்கு, ஒரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கப்படும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications