திமுக தேர்தல் அறிக்கை 2021: திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை உட்பட 12 முக்கிய வாக்குறுதி!
சென்னை: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையின் 12 முக்கிய வாக்குறுதிகள்:
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

- உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்படும்.

- அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்

- தமிழக சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும்

- பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.

- சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்

- கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் இழந்த தமிழக குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்'

- ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு - முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் ஜூன் 3 ஆம் நாளன்று அமல்படுத்தப்படும்

- பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் - டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்

- சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் திட்டம் - முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் ஜூன் 3 ஆம் நாளன்று அமல்படுத்தப்படும்.

- மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படும்

- நியாய விலைக்கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் - உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்

இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications