லஞ்ச ஒழிப்பு ஐஜி, கோவை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்...தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் வித்யா குல்கர்னி சிபிஐ அயல்பணிக்கு சென்ற காரணத்தால் லஞ்ச ஒழிப்புத்துறைக்குக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார், கோவை காவல் ஆணையர், மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ் கே பிரபாகர் பிறப்பித்துள்ளார். மாற்றம் பெற்ற அதிகாரிகள் விவரம் வருமாறு
1. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் வித்யா குல்கர்னி அயல்பணியாக சிபிஐக்கு சென்றதால் கோவை காவல் ஆணையராக பதவி வைக்கும் தீபக் எம் தாமோர் இடமாற்றம் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்

2. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் இடமாற்றம் செய்யப்பட்டு கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. பணியமைப்பு பிரிவு டிஐஜி பிரபாகரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சட்டம் ஒழுங்கு (கிழக்கு) இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சென்னை சட்டம் ஒழுங்கு (கிழக்கு) இணை ஆணையர் ராஜேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு)இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் (தெற்கு) செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை பணியமைப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. திருச்சி மாவட்ட எஸ்.பி, பா.மூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி, சுஜித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு வேலூர் மாவட்ட எஸ்.பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
9.நெல்லை மாவட்ட எஸ்.பி, மணிவண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. சென்னை நிர்வாக பிரிவு ஏஐஜி பி.சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டு நெல்லை மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. வேலூர் மாவட்ட எஸ்.பி, செல்வகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை நிர்வாகப் பிரிவு ஏஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. அயல் பணியில் இருந்து தமிழகம் திரும்பிய எஸ்.பி, ரம்யா பாரதி சென்னை சைபர் அரங்கம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி ஐஜி பதவியிலிருந்து எஸ்பி பதவிக்கு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இவர் கூடுதலாக செயலாக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பணிகளையும் கவனிப்பார்.
இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications