Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

120 சவரன் தங்க நகையா? ஞானசேகரனிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகை வியாபாரி.. அதிரடியில் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மூன்று நாட்கள் கஸ்டடி எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரித்துள்ளனர்.. அப்போது மேலும் பல்வேறு தகவல்கள் வெளியானதையடுத்து, அதன்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

3 நாள் போலீஸ் காவலில் இருந்து 100 சவரன் திருட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, கார், ஜீப் போன்றவைகளை பறிமுதல் செய்துள்ள நிலையில், இப்போது சுமார் 100 சவரன் நகைகளையும் ஞானசேகரனிடமிருந்து பள்ளிக்கரணை போலீசார் மீட்டுள்ளனர்.

120 Sovereigns Gold Jewellery gnanasekaran 120

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில், கோட்டூர்புரத்தை சேர்ந்த, ஞானசேகரன் என்ற 37 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர், சென்னை பள்ளிக்கரணை பகுதிகளில், சொகுசு பங்களாக்களை குறி வைத்து, நகை, பணம் கொள்ளை அடித்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.

போலீசாரிடம் வாக்குமூலம்

அந்தவகையில், கடந்த 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளிலுள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து, சொகுசு கார்களில் வந்து ஞானசேகரன் கொள்ளையடித்ததாக வாக்குமூலம் தந்ததாக 2 நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியிருந்தன.

அதாவது, பள்ளிக்கரணை பகுதியில் மட்டும் 7க்கும் மேற்பட்ட வீடுகளை நோட்டமிட்டு 250 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலத்தில் ஞானசேகரன் தெரிவித்துள்ளாராம்.

போலீஸ் கஸ்டடி விசாரணை

"கொள்ளையடிக்கும் நகையில், மூன்றில் ஒரு பங்கை என்னுடைய 3 மனைவியருக்கும், மற்ற இரண்டு பங்கை எனக்கும், தாய்க்கும் என, பங்கு பிரித்து கொள்வோம்" என்றும் ஞானசேகரன் வாக்குமூலம் தந்தாராம்.

இந்த வாக்குமூலத்தையடுத்து, ஞானசேகரனை 7 கொள்ளை வழக்கில் கைது செய்த போலீசார், சுமார் 100 சவரன் நகைகளை அவரிடமிருந்து மீட்டுள்ளதாகவும், மேலும் 150 சவரன் நகையை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து விசாரித்து வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.

கூட்டாளியும் கைது - 120 சவரன் நகை

இந்நிலையில், 3 நாள் சிறப்பு காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை ஆலந்தூரில் பழைய நகைகளை வாங்கி விற்கும் குணால் சேட் என்பவரிடம் விற்று பணம் பெற்று, அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியதாக ஞானசேகரன் தெரிவித்துள்ளாராம்.. இதையடுத்து நகை வியாபாரியிடம் இருந்து 120 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஞானசேகரனிடம் இருந்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

மூன்று நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், ஞானசேகரனை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். இதையடுத்து பள்ளிகரணை போலீசார் திருட்டு நகைகளை வாங்கிய குணால் சேட்டை நேற்று அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.. அத்துடன், ஆலந்தூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+