12ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு ரெடி? இன்றே விண்ணப்பிக்கலாம்.. தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு
சென்னை: 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.. இந்நிலையில், 12ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை பதிவிறக்கம் செய்யும் முறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு, கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது..

பள்ளிக்கு வரும் மாணவர்களை பாதுகாப்புடன் வரவேற்று கல்வியை கற்பிக்க பல்வேறு ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி துறை செய்திருந்தது.. குறிப்பாக,, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.5 கோடி விலை இல்லாத பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்திருந்தது.. .
அனைத்து பாட புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் பள்ளிகளுக்கு முன்கூட்டியே சென்றடைந்துவிட்டன. இது தவிர மற்ற விலையில்லாத பொருட்களும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படுகிறது.
இன்று விடைத்தாள் நகல்
இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில், கடந்த 8ம் தேதி, ரிசல்ட் வெளியாகியிருந்தன.. இன்று விடைத்தாள் நகல் வெளியிடப்பட உள்ளது..
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
படிவங்கள் பதிவிறக்கம்
மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 5, 6, 7-ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
மறு மதிப்பீடு
விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications