12th Results 2026: தட்டி தூக்கிய நம்ம வீட்டு பிள்ளைகள்.. 100க்கு 100 எடுத்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
சென்னை: தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இன்று சென்னையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை செயலர் சந்திரமோகன். இந்த முடிவுகளின் அடிப்படையில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளை அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் பாடவாரியாக நூற்றுக்கு நூறு எடுத்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது..
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை - ரசு தேர்வுகள் இயக்ககம் இணைந்து மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகளை கடந்த மார்ச் மாதம் நடத்தியது. மார்ச் இரண்டாம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 7,91,654 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,18,724 ஆகவும், 3 லட்சத்து 72930 என மாணவர்களின் எண்ணிக்கையும் இருந்தது.
தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95 20% என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவியர்களை இந்த முறை அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97 ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.19 ஆக உள்ளது. மாணவர்களை விட மாணவியர் 3.81 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 200639 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. 7536 மேல்நிலைப் பள்ளிகள் தேர்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதில் 489 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

மொத்தம் 16,024 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 1695 அரசு பள்ளி மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கணினி அறிவியலில் 695 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக விலங்கியல் பாடத்தில் 18 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.













Click it and Unblock the Notifications