12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு.. தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருப்பதை அடுத்து, முன்னதாக மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இன்று முதல்: இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று 7ம் தேதி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளன. சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த செய்முறைத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடக்கும். இதையடுத்து, பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு பிளஸ் 2 வகுப்புக்கு மே 9ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 19ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 19ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்திருக்கிறது.
அறிவுறுத்தல்: இந்த செய்முறைத் தேர்வுகளை சரியாக நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு முக்கிய அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் சுற்றறிக்கையில் உள்ளதாவது:
- தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.
- ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- சலுகை அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
- தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்"
என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது. மார்ச் 3 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்.
அறிவிப்பு: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும். 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications