சல்லி சல்லியா போச்சே.. பட்டென தினகரன் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு தெரியுமா.. "ஆ"வென பார்க்கும் அதிமுக
எடப்பாடி பழனிசாமி யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்ற ஆர்வம் எழுந்து வருகிறது
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் தினகரன், நேற்றைய தினம் உதிர்த்த கருத்துக்கள், மிகப்பெரிய அதிர்வலையையும், பல்வேறு யூகங்களையும் அரசியல் களத்தில் உருவாக்க வருகிறது.
மேலிட பாஜகவை பொறுத்தவரை, டிடிவி தினகரன் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்து வருகிறது.. அமமுகவின் வாக்கு வங்கியை தன் பக்கம் திருப்புவதைவிட, அதிமுகவின் வாக்கு வங்கியை சிந்தாமல், சிதறாமல் அள்ளவே, அதிக கவனம் செலுத்தி வருகிறது..
காரணம், கடந்த தேர்தல்களில் தினகரன் பிரித்த வாக்குகள் பெருமளவு அதிமுகவின் வாக்குகளே என்பதால்தான், பாஜக தினகரனுக்கு குறி வைத்து வருகிறது..

கடைசி சேஞ்ச்
கடந்த முறையே, தினகரனை கூட்டணிக்குள் இணைக்கும் முயற்சி நடந்து அது கடைசி நேரத்தில் முடியாமல் போய்விட்ட நிலையில், இந்த முறை கூட்டணி வாய்ப்பு சாத்தியம் என்கிறார்கள்.. கடந்த சட்டமன்ற தேர்தலில், அமமுகவை எடப்பாடி அரவணைக்காத பட்சத்தில், தினகரன் தனித்து நின்ற வாக்கு சதவீதமும் பாஜகவை திரும்பி பார்க்க வைத்தது.. இந்த முறையும் எடப்பாடி, தினகரனை கூட்டணிக்குள் சேர்க்காவிட்டால், ஓட்டுக்கள் ஒருபக்கம் பிரிவதுடன், ஓபிஎஸ்ஸும் தென்மண்டலத்தில் வாக்குகளை பிரித்துவிடுவார் என்ற கலக்கமும் பாஜகவுக்கு இருக்கவே செய்கிறது..

ஆபரேஷன் சவுத்
மேலும், வரும் தேர்தலில், தென்மண்டலங்களில், பாஜக காலூன்ற வேண்டும் என்பதால்தான், ஆபரேஷன் சவுத் என்ற வியூகத்தை கையில் எடுத்து வருகிறது.. இதற்கு டிடிவி தினகரனின் ஆதரவும் பாஜகவுக்கு தேவையாக இருக்கிறது என்கிறார்கள். அந்தவகையில், தினகரனை பாஜகவும், பாஜகவை தினகரனும் கைவிட வாய்ப்பில்லை என்றே அழுத்தமாக சொல்லி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், நேற்றைய தினம் அமமுக இணையதள வெளியீட்டு விழா நடந்தது.. அப்போது தினகரன் பேசும்போது, சில முக்கிய பாஜக நபர்களை அட்டாக் செய்துபேசினார்.

ஆட்டுக்கு தாடி
"ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற அண்ணாவின் நிலைப்பாடே அமமுகவின் நிலைப்பாடு... சனாதனம் குறித்தெல்லாம் ஆளுநர் பேச வேண்டிய அவசியமில்லை.. வேறு வேலையில்லாமல் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.. அவர் பேசுவதை அவர் வீட்டில் உள்ளவர்களே கேட்கமாட்டார்கள்.. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தால் இப்படிதான் பேசுவார்களா என்பது எனக்கு தெரியவில்லை" என்றார் தினகரன்.

தினகரன்
தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணியில் இணைய தயாராக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், "கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி செல்ல தயாராகவே இருந்தேன். அந்த தேர்தலில் 40 இடங்கள் கேட்டேன். ஆனால் அவர்கள் கொடுக்க தயாராக இல்லை.. குறிப்பாக கட்சியில் உள்ள சிலர் பதவி ஆசையால் அது நடக்காமல் போய்விட்டது.. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் ஒரு அணிலைப்போல் அமமுக பங்கு இருக்கும்" என்றார்.

டீல் ஓகே
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை, பாஜகவுடன் கூட்டணியே முடிவாகிவிட்டதாகவும், அதிமுக கூட்டணிக்குள் இருக்கிறதோ இல்லையோ, அமமுக நிச்சயம் சேர்ந்துவிடும் என்ற பேச்சு வலுவாக ஒலித்து கொண்டிருந்தது.. அதற்கேற்றார்போல், தினகரனும் பேசிக் கொண்டிருந்தார்.. ஆனால், நேற்றைய தினம் பட்டும், படாமலும் தினகரன் பேசியது, களத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.. இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.. பாஜக உடன் கூட்டணி என்று வெளிப்படையாக இப்போதே தெரிந்துவிட்டால், இது தமிழக களத்தில் வேறு வகையாக எதிரொலித்துவிடுமோ? இப்போதே பாஜக பக்கம் சாய்ந்துவிட்டால், கறாராக சீட் எண்ணிக்கையை கேட்டு வாங்க முடியாதோ? என்று நினைத்துதான், தினகரன் இவ்வாறு பேசியிருக்கலாம் என்கிறார்கள்.

ஆப்ஷன்கள்
ஆனால், மற்றொருபக்கம் வேறு விதமான யூகங்கள் பறக்கிறது.. இதுநாள் வரை சிறுபான்மையினருடன் ஆதரவை பெற்று, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வந்த நிலையில்தான் பெரும்பாலான வாக்கு வங்கியை தன் பக்கம் தக்க வைத்து கொள்ள தினகரனால் முடிந்தது.. அதாவது பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களைதான் தினகரன் அறுவடை செய்துள்ளார்.. அப்படி இருக்கும்போது, இப்போது பாஜக சாயலாகவே பேசி வருவதும், பாஜகவின் குரலாகவே ஒலித்து வருவதும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை முற்றிலும் இழந்துவிடக் செய்துவிடும் என்றும் அமமுகவிலேயே பலர் நினைக்கிறார்களாம். இப்படி பல்வேறு குழப்பங்கள் ஓடிக் கொண்டிருப்பதால், தன்னை ஒரு பொதுநல தலைவராகவே காட்டிக் கொள்ள முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த்
இதே போன்ற மனநிலைமைதான், பாஜகவுக்குள்ளும் ஓடுகிறதாம்.. ஆனால், டிடிவியுடன் பாஜகவுக்கு கூட்டணி தேவையா? என்ற இன்னொரு கேள்வியையும் சிலர் எழுப்பி வருகிறார்கள்.. இதற்கு சில காரணங்களையும் சொல்கிறார்கள்.. எம்பி தேர்தலின்போது, எஸ்பிடிஐ உடன் மட்டுமே அன்று அமமுக கூட்டணி வைத்திருந்தது.. ஆனால், கடந்த முறை தேமுதிகவையும் தன்னுடன் இணைத்து கொண்டு தேர்தலை சந்தித்தது.. இதில், கடந்த 2019-ல் கிட்டத்தட்ட 23 லட்சம் வரை அமமுக வாக்குகளை பெற்றது.. ஆனால், 2021-ல் கூட்டணியுடன் சேர்த்து, 13 லட்சத்து அளவுக்குதான் அமமுக வாக்குகளை பெற்றுள்ளது..

டவுட் பாஜக
அதாவது கூட்டணியை விரிவுபடுத்தியும்கூட, வாக்குகளில் சுருங்கிவிட்டது அமமுக.. எனவே, அமமுகடன் கூட்டணி தேவையா? என்றும் சிலர், பாஜகவின் காதை கடித்து கொண்டிருக்கிறார்களாம். எனினும், அதிமுகவுக்கு பலம் என்று சொல்லக்கூடிய இரட்டை இலையை மீறிதான், தினகரனால் 2019 தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய முடிந்தது என்பதால், பாஜக இந்த விஷயத்தில் யோசித்தே முடிவெடுக்கும் என்கிறார்கள்... தினகரன் பாஜகவில் கூட்டணி வைக்க போகிறாரா? இல்லையா? எடப்பாடி தினகரனை ஏற்றுக்கொள்வாரா? இல்லையா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications