ஷோபனாவை பலாத்காரம் செய்யவில்லை.. அத்தை மகளை பிளேடால் குத்தி கொன்ற மாமன் மகன் வாக்குமூலம்
சொத்துக்காக மாமன் மகளை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "ஷோபனாவை பலாத்காரம் செய்யவில்லை.. பாசமும் கிடைக்கல.. சொத்தும் கிடைக்கல.. அதனாலதான் வெறும் கொலை மட்டும் செய்தேன்" என்று 13 வயது மாமன் மகளை கொன்ற அத்தை மகன் பாபு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த தம்பதி பூபதி - உஷா. இவர்களது மகள்கள் மெர்லின், ஷோபனா. மெர்லினுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது.

பூபதி - உஷா இருவருமே சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிடவும் பூபதியின் தங்கையான வேதவள்ளிதான், ஷோபனாவை 11 வருடமாக வளர்த்து வந்தார். ஷோபனாவுக்கு வயது 13. சற்று மனநிலையும் சரியில்லாமல் இருந்ததால், 5ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டனர்.
வேதவள்ளி ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறார். 2 நாளைக்கு முன்பு, ஷோபனா ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்து கிடந்தார். ஷோபனாவின் கழுத்து, கை, இடுப்பு, தொடை பகுதிகளில் சதைகள் கிழிந்து தொங்கி ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. உடம்பெல்லாம் பிளேடுகளை கொண்டே கிழிக்கப்பட்டு இருந்தன.
உடனடியாக ஆதம்பாக்கம் போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட அவர்களும் விசாரணையை துவங்கினர். அப்போதுதான் வேதவள்ளியின் மூத்த மகன் பாபு மீது சந்தேகம் எழுந்தது. பாபுக்கு 26 வயதாகிறது. இவர்தான் சம்பவம் நடந்த சமயத்தில், வீட்டிற்கு கடைசியாக வந்துவிட்டு சென்றதாகவும், அப்போது பாபு ஆவேசமாக இருந்ததை பார்த்ததாகவும் அக்கம்பக்கத்தினர் தகவல் சொன்னார்கள். இதனால் பாபுவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இப்போது கைது செய்துள்ளனர்.
அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "எதுவா இருந்தாலும் ஷோபனாதான்.. எனக்கு அன்பு, பாசம் எதுவுமே அவங்க கிட்ட இருந்து கிடைக்கல. இப்போ நாங்க இருக்கிற வீடு ஷோபனாவோட அம்மா-அப்பா வீடு. அதனால, எப்படியும் இந்த வீடும் ஷோபனாவுக்குதான் போயிடும் என்று நினைத்தேன். அதனால, வீட்டை விற்று எனக்கு பணம் தரும்படி அம்மாகிட்ட கேட்டேன். தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இதனால் எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வந்துட்டே இருந்தது.
பாசமும் கிடைக்கல, சொத்தும் எனக்கு வராதுன்னு நினைச்சுதான் ஷோபனா கொலை செய்ய முடிவு பண்ணேன். பிளேடு, கத்தி வெச்சு கொலை பண்ணேன். ஆனால் கற்பழிக்கவில்லை" என்றார். எனினும் ஷோபனாவின் அடிவயிறு, தொடை பகுதிகளில் நிறைய காயங்கள் உள்ளன. அதனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். தொடர்ந்து பாபுவிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications