சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாளில்.. 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக திடீர் டிரான்ஸ்பர்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். முக்கியமாக தலைமை பொறுப்புகளை நேர்மையான அதிகாரிகளை நியமித்து வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக இன்று பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

இன்று காலை தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னையின் முன்னாள் மாநகரக காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், தற்போது, சென்னை குற்றப்பிரிவு ஏ.டிஜிபி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக ஆர். தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது கூடுதலாக 14 ஐஏஎஸ் அதிகாரிகள், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம்

இடமாற்றம்

TNPSC செயலராக இருந்த நந்தகுமார் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன் நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளராக நீரஜ் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஆனந்தகுமார் நியமனம்

நியமனம்

நியமனம்

சிப்காட் மேலாண் இயக்குநர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.நுகர்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை ஆணையராக ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கல்வித் துறை ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ்

ஐபிஎஸ்

ஐபிஎஸ் அதிகாரிகளில், நெல்லை மாநகர காவல் ஆணையர் அன்பு, தென்மண்டல ஐ.ஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மண்டல ஐ.ஜி தீபக் தாமோர், கோவை மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் பவாணீஷ்வரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு விசாரணை பிரிவு ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை

நெல்லை

நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் வித்ய ஜெயந்த் குல்கர்னி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் காலையில் இருந்து மொத்தமாக 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

English summary
14 IAS and 20 IPS officers are transferred in Tamilnadu in a single day by the state CM Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X