"அந்த மாமா தான் எல்லாத்துக்கும் காரணம்".. டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் தந்த 14 வயது சிறுமி..!
சைலேந்திர பாபுவிடம் 14 வயது சிறுமி புகார் தந்துள்ளார்
சென்னை: தங்களுக்கு சொந்தமான டிராக்டர், கலப்பையை தன் மாமா அபகரித்து விட்டதாகவும், அதை மீட்டு தரும்படியும் 14 வயது சிறுமி ஒருவர், டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் தந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வைராபாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்ஷணா... 14 வயது சிறுமி.. கடந்த 2016-ல் குடும்பத்துடன் கரூரில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
ஆனால் பெற்றோர் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துள்ளது.. அதனால், தர்ஷனா ஈரோடுக்கு வந்து, தன் பாட்டியுடன் வசித்து வருகிறார்.

அப்பா
இந்நிலையில் கடந்த 2020, அக்டோபர் மாதம் தர்ஷணாவின் அப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.. ஆனால், அவரது டிராக்டரை, தன் அப்பாவின் சகோதரி மகன் பூபாலன் அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது.. அந்த டிராக்டரை சிறுமியின் அப்பா, லோன் போட்டு சொந்த உழைப்பில் வாங்கியதாம்.. தன் மாமா பூபாலன், அந்த டிராக்டரை அபகரித்து கோவை மாவட்டத்தில் உள்ள அவரது இடத்தில் மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

மாமா
மேலும், தன் அப்பா நிறைய கடன் வாங்கிவிட்டதாக பொய் கணக்கையும் மாமா எழுதி வைத்துள்ளாராம். மேற்கண்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் புகாராக எழுதி, சிறுமி தர்ஷணா தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவை இன்று நேரில் சந்தித்து மனு தந்தார்.. அந்த மனுவை பெற்று கொண்ட டிஜிபி விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி தந்துள்ளார்..

புகார் மனு
புகார் மனு அளித்த பிறகு சிறுமி தர்ஷணா செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது "நான் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கேன்.. என் அப்பா டிராக்டர், கலப்பை வாங்கினார்.. அந்த டிராக்டர், கலப்பையை என் மாமா எடுத்துக்கிட்டார்.. நிறைய பொய் கணக்குகள் சொல்கிறார்.. என் அப்பா, மாமா கிட்ட எந்த பணமும் கடனாக வாங்கவில்லை.. ஆனால் பொய் கணக்கு எழுதி வைத்து காட்டுகிறார்.

மோசடி
அதை வைத்து, என்னையும், என் பாட்டியையும் மாமா மிரட்டுகிறார்.. மோசமா பேசறார்.. எங்க கலப்பையும், டிராக்டரும் வேண்டும் என்று ஈரோடு, கரூர் எஸ்பியிடம் புகார் தந்தேன்.. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.. அதனால்தான் டிஜிபியிடம் புகார் தர வந்தேன்.. என் அப்பாவின் டிராக்டர், கலப்பை, பைக், ஏடிஎம் கார்டு, செல்போன் எல்லாமே என் மாமா கிட்டதான் இருக்கு.. அதை மீட்டு தரணும்னு புகார் தந்திருக்கேன்" என்றார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications