3வது நீதிபதி வைத்த ‘ட்விஸ்ட்’.. அந்த 15 நாள்.. பூகம்பமே வந்தாலும்? செந்தில் பாலாஜிக்கு சிக்கல்! ஆஹா!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டாலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த 15 நாட்களை காவல் காலமாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? கூடாதா என்பதில் இரு தரப்பும் கடுமையாக வாதங்களை வைத்த நிலையில், 3வது நீதிபதி ட்விஸ்ட் வைத்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் இரண்டு அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக சி.விகார்த்திகேயனுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

சிவி கார்த்திகேயன் தீர்ப்பு: கடந்த சில நாட்களாக இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை எடுத்து வைத்தனர். இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திக்கேயன் தீர்ப்பை வாசித்தார்.
அப்போது, அமலாக்கத்துறைக்கு காவலில் எடுக்க அதிகாரம் உள்ளதா எனபது குறித்து இரு தரப்பும் வாதங்களை வைத்தார்கள். அமலாக்கத்துறையினர் காவல்துறையினர் அல்ல என கபில் சிபல் வாதத்தில் மாற்றுக் கருத்து இல்லை. அமலாக்கத்துறையினரை காவல்துறையினராக கருத முடியாவிட்டாலும் அவர்கள் புலன் விசாரணை நடத்துவதை தடுக்க முடியாது.
பரத சக்கரவர்த்தி தீர்ப்போடு உடன்படுகிறேன்: காவலில் எடுத்து விசாரிப்பது அமலாக்கத்துறையினரின் உரிமை. அந்த உரிமையை பறிக்க முடியாது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் காவல் எடுக்க வேண்டியது அவசியம். கஸ்ட்டி வழங்கி பரத சக்கரவத்தி வழங்கிய உத்தரவுடன் உடன்படுகிறேன் என்று 3வது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அந்த 15 நாள்?: சிகிச்சை காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா? முடியாதா? என்பதில் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி இரு தரப்பும் கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தது. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலவில்லை, முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க முடியாததால், சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்றக் காவல் காலமாக கருதக்கூடாது என துஷார் மேத்தா வாதம் செய்தார்.
முதல் 15 நாள் முடிந்துவிட்டால் அது முடிந்ததுதான், அதன்பின் கஸ்டடி கோரமுடியாது என்று கபில் சிபல் வாதிட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் 15 நாட்கள் முடிந்தது; முடிந்தது முடிந்தது தான் என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறை கஸ்டடி: இந்நிலையில், இன்று 3வது நீதிபதி அளித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் சிகிச்சை காலத்தை நீதிமன்ற காவலாக கருத முடியாது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்ற காவல் காலமாகக் கருத முடியாது. சிகிச்சைக்குப் பிறகு அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், 15 நாள் நீதிமன்றக் காவல் காலத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாமல் போன காரணத்தால், அதை நீதிமன்றக் காவல் காலமாக கருத முடியாது என அமலாக்கத்துறைக்குச் சாதகமான உத்தரவை 3வது நீதிபதி அளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications