சுதந்திர தின விழா.. முதலமைச்சரின் காவல் பதக்கத்துக்கு 15 காவல்துறை அதிகாரிகள் தேர்வு! முழு விவரம்!
சென்னை: சுதந்திர தின விழாவை ஒட்டி முதலமைச்சரின் காவல் பதக்கத்துக்கு 15 காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இது தொடர்பான விவரம் வருமாறு;
பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:-
*திரு.பிரேம்ஆனந்த்சின்ஹா, இ.கா.ப.,கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (தெற்கு), சென்னை பெருநகர காவல்.
*திரு.க. அம்பேத்கார், காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கடலூர்.
*திரு.சு. சிவராமன்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், அடையாறு போக்குவரத்து காவல் நிலையம்,சென்னை பெருநகர காவல்.
*திரு.வை. பழனியாண்டி,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், இ2 மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம்,மதுரை மாநகரம்.
*திரு.மா.குமார்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஜே-10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையம், தாம்பரம் காவல் ஆணையரகம்.
இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-
திரு. கோ.ஸ்டாலின், காவல்துறை துணை ஆணையாளர், தலைமையிடம், மதுரை மாநகரம்.
திரு.ச. கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்தகுற்ற அலகு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ,சேலம் மாநகரம்
திருமதி. மா. பிருந்தா, காவல் ஆய்வாளர், ரோஷனை காவல் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
திருமதி அ.பிரபா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாமக்கல் மாவட்டம்.
திரு.வீ. சீனிவாசன், காவல் ஆய்வாளர், ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையம், சென்னை மாநகரக் காவல்.
திருமதி. மா.சுமதி, காவல் ஆய்வாளர்,அனைத்து மகளிர் காவல் நிலையம், கொடைக்கானல்,திண்டுக்கல் மாவட்டம்.
திருமதி சி. நாகலெட்சுமி, காவல் ஆய்வாளர், கரியாப்பட்டினம் காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.
திரு. வெ.துளசிதாஸ், காவல் உதவி ஆய்வாளர், ட்டீ-12, பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சென்னை பெருநகர காவல்.
திரு.ச.ல. பார்த்தசாரதி, காவல் உதவி ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, ஒருங்கிணைந்த குற்ற அலகு-1, சென்னை.
திரு. கா.இளையராஜா, காவல் உதவி ஆய்வாளர், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சென்னை.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications