2026ல் ஓட்டு போட முடியாது.. SIRஆல் ஓட்டு காலியா? இன்றும், நாளையும் சிறப்பு முகாம்.. மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையின் போது சுமார் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்றும் நாளையும் இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, SIR நடைமுறை சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் 4 முதல் மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெற்றனர்.

முதலில் டிசம்பர் 4 வரை இருந்த அவகாசம் பின்னர் டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தற்போது தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடி 43 லட்சம் 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம்
இதில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதே நேரத்தில், மொத்தம் 97 லட்சம் 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 15 சதவீதத்தை தாண்டுகிறது. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, நீக்கப்பட்டவர்களில் 26 லட்சம் 94 ஆயிரத்து 672 பேர் இறந்தவர்கள். 3 லட்சம் 98 ஆயிரத்து 278 பேருக்கு இரட்டைப் பதிவு இருந்தது.
எஸ்ஐஆர் நடவடிக்கை
ஆனால் முகவரியில் இல்லாதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்டவர்கள் மட்டும் 66 லட்சம் 44 ஆயிரத்து 881 பேர். இவர்கள் அனைவரும் உண்மையிலேயே முகவரியில் இல்லாதவர்களா அல்லது தவறாக நீக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களும் உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தங்களின் பெயர் தவறாக நீக்கப்பட்டதாக நினைக்கும் வாக்காளர்கள், படிவம் 6 மூலம் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம். அதற்கான அவகாசம் ஜனவரி 18 வரை வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பெயர் சரிபார்ப்பு
பெயர் நீக்க படிவம் 7, திருத்தம் மற்றும் இடமாற்றத்துக்கு படிவம் 8 பயன்படுத்தப்படுகின்றன. ஆதார் எண் மட்டும் ஆவணமாக ஏற்கப்படாது. அதோடு சேர்த்து பிறப்பு சான்று அல்லது இருப்பிடச் சான்று போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதுவரை சுமார் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர் மட்டுமே பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த மனுக்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படுவார்கள்.
இறுதி வாக்காளர் பட்டியல்
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அன்று வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தீவிர திருத்தப் பணி நடைபெறாத காரணத்தால் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் நீக்கப்படாமல் இருந்தது. அதனால் தான் இத்தனை பெரிய எண்ணிக்கையில் நீக்கங்கள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாம்
ஏற்கனவே எஸ்ஐஆர் நடவடிக்கையால் தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக கருதுபவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து படிவம் 6 மூலம் மீண்டும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் முகவரி மாற விரும்புபவர்கள்,பெயர் நீக்க விரும்புபவர்கள், திருத்தம் மேற்கொள்பவர்கள் படிவம் 7 மற்றும் 8 ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். இதற்காக தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக இன்று மற்றும் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. வாக்காளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான நடைமுறைகள் தொடங்கும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்.. ஏப்.6 ஆம் தேதி வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியல்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்? -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications