தமிழகத்தில் முதல்முறையாக 16 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. 15 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 16,665 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது முதல் முறையாக 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிடுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குணமாதல்
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,30,167 ஆகும். இன்று ஒரே நாளில் 15,114 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 10,06,033 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் இன்று 1,10,308 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,30,042 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,23,78,247 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய பாதிப்பு
இன்று ஒரே நாளில் 1,25,004 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,20,05,237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய நிலவரப்படி 10,239 ஆண்களுக்கும், 6,426 பெண்களுக்கும் கொரோனா புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடு திரும்பியவர்கள்
தமிழகத்தில் 264 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இன்று ஒரே நாளில் 98 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். இதுவரை 13,826 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications