ஜியோ, ஏர்டெல்லுக்குப் பதிலாக பிஎஸ்என்எல் பயன்படுத்தினால் இவர்களுக்கு 1600 ரூபாய் லாபம்
சென்னை: ஒரே நாளில் லட்சக்கணக்கனோர் பிஎஸ்என்எல் சிம் வாங்கி வருகிறார்கள். இதில் இண்டர்நெட் வசதி இல்லாத பட்டன் போன் வைத்திருப்பவர்கள் பிஎஸ்என்எல் பயன்படுத்தினால் ஆண்டுக்கு 1600 ரூபாய் சேமிக்க முடியும். மற்ற எல்லா நிறுவனங்களையும் விட பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே மிக குறைவான கட்டணத்துடன் சேவைகளை வழங்கி வருகிறது. அதை பற்றி பார்ப்போம்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல்க்கு இத்தனை ஆயிரம் பேர் மாறிவிட்டார்கள், இத்தனை லட்சம் பேர் மாறிவிட்டார்கள் என்று அடுத்தடுத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த மாதம் 3ம் தேதி ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி.
ஜியோவை பொறுத்தவரை 2 ஜிபி டேட்டா உடன் 28 நாள்கள் வரை நீடிக்கும் 155 ரூபாய் பேக், 189 ரூபாயாக தடாலடியாக உயர்ந்தது. தினம்தோறும் 2 ஜிபி டேட்டா வழங்கும் 299 ரூபாய் ரீசார்ஜ் பேக், 349 ரூபாயாக சட்டென உயர்ந்தது. 399 ரூபாய் 3 ஜிபி டேட்டா பேக் 449 ரூபாயாக உயர்ந்தது.
ஜியோவை பொறுத்தவரை 2 ஜிபி டேட்டா உடன் 28 நாள்கள் வரை நீடிக்கும் 155 ரூபாய் பேக், 189 ரூபாயாக தடாலடியாக உயர்ந்தது. தினம்தோறும் 2 ஜிபி டேட்டா வழங்கும் 299 ரூபாய் ரீசார்ஜ் பேக், 349 ரூபாயாக சட்டென உயர்நத்தது. 399 ரூபாய் 3 ஜிபி டேட்டா பேக் 449 ரூபாயாக உயர்ந்தது.
56 நாள் பிளானை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா உடன் கூடிய 479 ரூபாய் பேக் 579 ரூபாயாகவும், 2 ஜிபி டேட்டா உடன் கூடிய 533 ரூபாய் பேக் 629 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்கள் பிளான் கொண்ட 6 ஜிபி டேட்டா கொண்ட 395 ரூபாய் பேக் 479 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஏர்டெல்லை பொறுத்தவரை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 179-ல் இருந்து ரூ. 199-ஆக உயர்ந்தது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 455-ல் இருந்து ரூ. 509 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி காண்ட ரூ.179 பிளானை ரூ.199க்கு உயர்த்தி உள்ளது. ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் கூடிய பிரபலமான 84 நாள் வேலிடிட்டி திட்டத்தின் விலையை ரூ.719ல் இருந்து ரூ.859க்கு உயர்த்தி இருந்தது. கிட்டத்தட்ட எல்லா பிளான்களிலுமே 50 முதல் 100 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்த போதே பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பிற்கு இது தொடர்பாகப் புகார்களை அளித்தனர். எனினும் கடந்த 3 ஆண்டுகளாக டெலிகாம் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றும் கட்டண உயர்வுக்கு பிறகும் கூட உலகிலேயே மிகக் குறைந்த ரீசார்ஜ் கட்டணத்தைக் கொண்ட நாடாக இந்தியாவே இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த மக்கள், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் போர்ட் ஆப்சன் மூலம் மாறி வருகிறார்கள். ஒரே 3லட்சம் பேர் சிம்கார்டுகளை அண்மையில் வாங்கினார்கள். தினமும் லட்சக்கணக்கானோர் பிஎஸ்என்எல் சிம் வாங்கி வருகிறார்கள். இந்த வேகத்தில் சென்றால் இந்த மாத இறுதிக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் ஈர்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையதள வசதி உடைய போன் வைத்துள்ளவர்கள் ஏர்டெல், ஜியோ, வோடபோன் வைத்திருந்தால் ஒவ்வொரு மாதமும் 100 முதல் 250 வரை சேமிக்க முடியும். ஒரு வீட்டில் 4 பேர் வரை பிஎஸ்என்எல்க்கு மாறினால 1000 வரை மாதம் சேமிக்க முடியும் என்கிற அளவில் சேமிப்பு பிளான்களை பிஎஸ்என்எல் அறிவித்து வருகிறது.
ரூ.249 பிளான் படி,, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகளுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 45 நாட்களுக்கு பெற முடியும். இதே 249 திட்டத்தில் ஏர்டெல் வெறும் 28 நாளைக்கு வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் 1 ஜிபி டேட்டா மட்டுமே தருகிறது.
ரூ. 347 பிளான் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 54 நாட்களுக்கு பிஎஸ்என்எல் தருகிறது. இதேபோல் ரூ. 599 பிளான்ப டி அன்லிமிடெட் கால் வசதியுடன், 100 இலவச எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை 84 நாட்களுக்கு தருகிறது.
காற்று பிஎஸ்என்எல் பக்கம் வீசுதே.. சிம் வாங்க கூட்டமாக குவியும் மக்கள்.. ஒரே நாளில் 3 லட்சம் சேல்ஸ்
இன்டர்நெட் வசதி இல்லாத போன்களுக்கு, நெட் இல்லாமல் கால் மட்டும் செய்யக்கூடிய பிளான்கள் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பிளான்களே இல்லை.. டிராய் இதுபற்றி எந்த கேள்வியும் இதுவரை கேட்டது இல்லை. இன்டர்நெட்டே பயன்படுத்தாத இவர்கள், 189 ரூபாய், 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தே ஆக வேண்டும். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் 107 ரூபாய் திட்டத்தில் 40 நாட்கள் வேலிடிட்டியுடன் 3ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் இலவசம் மற்றும் 200 நிமிடம் இலவச கால் வசதி ஆகியவற்றை கொடுக்கிறது.
எனவே பட்டன் போன் வைத்திருப்பவர்கள் ஒருவருடத்திற்கு வோடபோன், ஜியோ, ஏர்டெல் பயன்படுத்தினால், 28 நாளைக்கு 199 என பயன்படுத்தினால் , மொத்தம் 13 முறை 199 ரூபாய்க்கு ஆண்டுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் பிஎஸ்என்எல் பயன்படுத்துவோர் 40 நாள் வேலிடிட்டி கொண்ட பிளானின் படி 107 ரூபாய்க்ககு 9 முறை ரீசார்ஜ் செய்தால் மொத்தமே 976 ரூபாய் தான் வரும். கிட்டத்தட்ட 1600 ரூபாயை நீங்கள் சேமிக்க முடியும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications