நாளை தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர்- எம்.எல்.ஏக்களுக்கு கொரோனே நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
சென்னை: 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அமைந்த உடன் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்புக்காகவும் சபாநாயகர் தேர்வுக்காகவும் சட்டசபை கூட்டப்பட்டது. இதனையடுத்து முதல் சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறும். புதிய அரசின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

முதல் நாள் கூட்டம்
ஆங்கிலத்தில் முதலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற பின்னர் சபாநாயகர் அப்பாவு அதனை தமிழில் வாசிப்பார். ஆளுநர் உரையுடன் நாளைய சட்டசபை கூட்டம் நிறைவடையும்.

எத்தனை நாட்கள்?
பின்னர் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி விவாதித்து முடிவு அறிவிக்கப்படும். நடப்பு சட்டசபை கூட்டத் தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த சான்றிதழ் கொண்டுவந்தால்தான் எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications