தமிழகத்தில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.. முதல்முறையாக 107 பேர் மரணம்!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 17,897 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது முதல் முறையாக 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முதல்முறையாக தமிழகத்தில் 107 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிடுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17,897 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குணமாதல்
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,48,064 ஆகும். இன்று ஒரே நாளில் 15,542 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 10,21,575 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் இன்று 1,12,556 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,40,064 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,25,18,836 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய பாதிப்பு
இன்று ஒரே நாளில் 1,35,408 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,21,40,645 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய நிலவரப்படி 10,866 ஆண்களுக்கும், 7031 பெண்களுக்கும் கொரோனா புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடு திரும்பியவர்கள்
தமிழகத்தில் 265 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இன்று ஒரே நாளில் 107 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். முதல் முறையாக ஒரே நாளில் இத்தகைய அளவுக்கு பலி எண்ணிக்கை உள்ளது. இதுவரை 13,933 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
-
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications