அடுத்த 3 மணி நேரத்திற்கு.. கோவை, நீலகிரி உட்பட இந்த 17 மாவட்டங்களுக்கு செம மழை தான்.. வானிலை மையம்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை 7 மணியளவில் சென்னையில் இருந்து 150 கிமீ தொலைவில் இருந்தது. மணிக்கு 18 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அடுத்த மூன்று மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர்,திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாகவும் இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் முன்னெச்சரிக்கையாக நாளை சென்னை, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications