தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. நெல்லைக்கு புதிய கமிஷனர் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது பணியிட மாற்றங்கள் நடைபெறும். அந்த வகையில் இன்று தமிழக காவல் துறையில் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

* தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்.
* சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்.
* மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்.
* நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், வட சென்னை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம்.
* நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம்.
* ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்.
* மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்.
* மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்.
* மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி காவல்துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக நியமனம்.
* ரயில்வே டிஐஜியாக அபிஷேக் தீட்ஷித் நியமனம்.
* ராமநாதபுரம் சரக டிஐஜியாக அபினவ் குமார் நியமனம்.
* சாமூண்டீஸ்வரி ஐபிஎஸ் சட்டம் ஒழுங்கு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications