ரேஷன் கடைகளுக்கு மேஜர் உத்தரவு? அப்ப பொங்கலுக்கு சர்ப்ரைஸ் இருக்கா? குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆர்வம்
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. அதேசமயம், விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என்பதிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு கேட்டு கடந்த ஜூன் மாதம் முன்பாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை.. ஜூன் மாதத்துக்கு முன்பாக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டுமே புதிய ரேஷன் கார்டு விநியோகம் நடக்கிறது. இதில்கூட ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

அதேபோல, ஜூன் மாதம் 20ம் தேதிக்கு பிறகு புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த விண்ணப்பங்களும் பரிசீலனையில் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லையாம். அதுமட்டுமல்லாமல், விரைவில் பொங்கல் வருவதால், பொங்கல் பரிசு விநியோகமும் துவங்கப்பட்டுவிடும். இதுபோக, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்களும் குவிந்து வருகின்றன.
எப்போது கிடைக்கும்: எனவே, புதிய ரேஷன் கார்டுகள் அனைவருக்குமே கிடைக்க, 6 மாதங்களுக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். அப்படியே புது ரேஷன் விநியோகித்தாலும், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு சற்று தாமதமாகலாம் என்றும் சொல்கிறார்கள். இப்படி புதிய ரேஷன் கார்டுகள் குறித்த பல்வேறு சலசலப்புகளும், வதந்திகளும், என மாறி மாறி வட்டமடித்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். பழனியில், ரூ.5.80 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசும்போது, "தமிழகத்தில் இதுவரை 17 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 44 மாதங்களில் 2500 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக முழுநேரம், பகுதிநேர ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டது. 2 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் 20.70 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர்" என்றார்,.
ரொக்க பணம்: அதேபோல, பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்தும் மற்றொரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப் பணம் குறித்த அதிகார அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனால் கடந்த வாரம் உணவு பொருள் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருவதாகவும், பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இலவச வேட்டி, சேலைகளையும், ஜனவரி 10ம் தேதிக்குள் விநியோகிக்க ரேஷன் கடைகளுக்கு கைத்தறித் துறை அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக, தகவல்கள் வட்டமடிக்கின்றன..
வேட்டி, சேலை: அப்படியானால், பரிசு தொகுப்புடனே பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகளையும் அரசு வழங்கப்போகிறதா? என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், ரேஷன் கடைகளுக்கு கைத்தறி துறை, இலவச வேட்டி சேலைக்கான அறிவுரையை வழங்கியிருப்பதாக கூறப்படுவது, மிகுந்த மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ரேஷன்தார்களிடம் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications