சென்னையில் ஷாக்! அத்துமீறிய இன்ஸ்டா நண்பர்.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் ஒருவர், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவர் கையில் காயங்களுடன் அழுதவாறு நின்றிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் இது குறித்து விசாரித்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் வீடு புகுந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை, யானை கவுனி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரை கைது செய்திருக்கிறது.

சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சிறுமி மிகவும் பதற்றமாக காணப்பட்டார். அவரிடம் நாங்கள் பொறுமையாக விசாரித்தோம். ஆனால், அவர் எங்களுக்கு போதுமான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. மட்டுமல்லாது சிறுமியின் கையில் இருந்த காயமும் கத்தியால் ஏற்பட்டது கிடையாது என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே, அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை செக் செய்தோம். அதில், இளைஞர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைவது தெரிய வந்தது.
ஆனால் அவரின் கையில் கத்தி போன்ற எந்த ஆயுதங்களும் இல்லை. வந்த நபர், அதிரடியாக வீட்டிற்குள் நுழையாமல், பொறுமையாக நுழைந்திருக்கிறார். அதேபோல வெளியேறும்போதும் எந்த அவசரமும் இன்றி கேசுவலாக சென்றிருக்கிறார். எனவே சிறுமியிடம் நாங்கள் தீவிரமாக விசாரணை நடத்தினோம். அப்போதுதான் அந்த இளைஞர், சிறுமியின் இன்ஸ்டா நண்பரான யானை கவுனி பகுதியை சேர்ந்த 19 வயது காணா பாடகர் என்பது தெரிய வந்தது.
சிறுமியும், இளைஞரும் சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிரம் மூலம் நண்பர்களாக பழகியுள்ளனர். சம்பவம் நடந்த நாளன்று இளைஞர் பெரும்பாக்கத்திற்கு வேலையாக வந்திருக்கிறார். அங்கு வீட்டில் தனியாக இருந்த சிறுமியை சந்தித்திருக்கிறார். அப்போது வலுக்கட்டாயமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து ஏன் வெளி ஆட்களை வரவழைத்தாய் என பெற்றோர்கள் திட்டுவார்கள் என்பதால், அடையாளம் தெரியாத நபர் தன்னை வன்கொடுமை செய்துவிட்டார் என்று சிறுமி பொய் கூறியுள்ளார். இறுதியாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை நாங்கள் கைது செய்திருக்கிறோம். அவர் மீது ஏற்கெனவே சில கஞ்சா வழக்குகளும் இருக்கின்றன. தற்போது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியை ஏமாற்றி, இன்ஸ்டா மூலம் பழகிய நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications