நீங்க எந்த மாவட்டம்?.. அடுத்த 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் வெளுக்கும் மழை!
சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் கேரளாவில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிவிட்டது. இதனால் தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்யும்.
தற்போது ஜூன் 3ஆம் தேதி முதலே மதுரை மாவட்டத்தில் மழை பெய்தது. இரவு நேரத்தில் அதிக மழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பெரும்பாலான இடங்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அத்துடன் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்கிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மதுரையில் பெய்த மழையால் திருமங்கலத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது.

18 மாவட்டங்கள்
அடுத்த 2 மணி நேரத்தில் புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை,
திருவண்ணாமலை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை
அது போல் நாளையும் தமிழகத்தின் சில வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை பெய்யக் கூடும். நாளை மறுநாள் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

48 மணி நேரம்
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென் மாவட்டங்கள்
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டதால் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications