தகுதி நீக்க வழக்கில் என்ன நடந்தால் என்ன.. தினகரன் வைத்து இருக்கும் 4 திட்டங்கள் இதுதான்!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு முன்னதாகவே டிடிவி தினகரன் சில முக்கியமான திட்டங்களை ஏற்கனவே போட்டுவைத்துவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
Recommended Video

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு முன்னதாகவே டிடிவி தினகரன் சில முக்கியமான திட்டங்களை ஏற்கனவே போட்டுவைத்துவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. நீதிபதி சத்யநாராயணன் இன்று இந்த தீர்ப்பை வழங்க உள்ளார்.
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதில் தினகரன் எடுக்க போகும் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 4 திட்டங்களை தினகரன் போட்டுவைத்துள்ளார் என்கிறார்கள்.

பாதுகாக்க திட்டம்
முதலாவதாக தினகரன் தன்னுடைய ஆதரவாளர்கள் எல்லோரையும் பாதுகாக்கும் முடிவில் இருக்கிறார். இந்த தீர்ப்பு தினகரனுக்கு ஆதரவாக வரும்பட்சத்தில் எம்எல்ஏக்கள் குதிரை பேரம் நடக்கும். அப்படி நடக்கும்பட்சத்தில் எம்எல்ஏக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தினகரன் இப்போதே சில ரகசிய இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆட்சியை கலைக்க மாட்டார்
ஆனாலும் தீர்ப்பு சாதகமாக வந்தாலும் அதிமுக ஆட்சி முடிந்துவிட்டு தேர்தல் வர வாய்ப்பில்லை என்றுதான் கூறுகிறார்கள். ஆட்சியை மொத்தமாக கலைக்கும் எண்ணம் தினகரனுக்கு கிடையாது என்கிறார்கள். ஆனால் வேறு ஒரு திட்டத்தில் அவர் உள்ளார். ஆட்சியையும் முக்கியமாக கட்சியையும் கைப்பற்றும் எண்ணம் மட்டுமே அவருக்கு இருக்கிறது. தீர்ப்பு சாதகமாக வந்தால் ஆட்சியை கைப்பற்ற மட்டுமே நடவடிக்கை எடுப்பார் என்று கூறுகிறார்கள்.

தினகரன் முதல்வராகலாம்
முக்கியமாக எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மீண்டும் எம்எல்ஏக்கள் மனு அளிக்க வாய்ப்புள்ளது. அதோடு ஓ.பி.எஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இதனால் தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், கண்டிப்பாக முதல்வர் மாற வாய்ப்புள்ளது. ஆனால் முதல்வர் மட்டும்தான் மாறுவார்.

எதிர் என்றால்
அதேபோல் தினகரனே கூட முதல்வராக முயற்சி செய்வார் என்றும் கூறுகிறார். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அவர் பெற முயற்சி செய்வார் என்கிறார்கள். ஒருவேளை தீர்ப்பு எதிராக வந்தால், மேல்முறையீடு செய்ய யோசனை வைத்துள்ளார் தினகரன் என்று தெரிவிக்கிறார்கள்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?










Click it and Unblock the Notifications