Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அடிமடியிலேயே".. விஜயபாஸ்கர் தலைக்கு மேல் "கத்தி".. கசியுமா ரகசியம்.. விடுமா திமுக.. தாங்குமா அதிமுக

விஜயபாஸ்கர் குறித்தும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்தும் புகழேந்தி கருத்து கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயபாஸ்கர் ஏகப்பட்ட சிக்கலில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள்படி பார்த்தால் விஜயபாஸ்கர் சிக்குவது உறுதியாகிறது" என்று புகழேந்தி கூறியுள்ளது, மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், தங்கமணி ஆகிய 6 அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்..
அந்த சோதனைகளில், கணக்கில் வராத கோடிக்கணக்கில் ரூபாய் பணம் மற்றும் நகைகளும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது... அதாவது, இதுவரை 6 மாஜிக்களிடம் சோதனை நடந்து முடிந்துள்ளது..

 7 + 6

7 + 6

இந்த 6 பேரும், மொத்தமாக 186.81 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளது நடந்து முடிந்த ரெயிடுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இன்னும் மாஜி அமைச்சர் காமராஜ் கணக்கு இதில் சேரவில்லை. இந்த 7 பேருமே அமைச்சரவை வரிசையில் பிரதான இடத்தை பிடித்தவர்.. அதேபோல, இதில், டாப்பில் உள்ள 2 பேரிடம் மட்டும், திமுக இன்னும் நேரடியாக நெருங்கவில்லை.. ஆனால், அவர்களுக்கு பதிலாக, அவர்களின் ஆதரவாளர்கள், உதவியாளர்கள், "வலதுகரங்களை, டார்கெட் செய்து வருகிறது..

 லீடர்கள்

லீடர்கள்

இப்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.. இந்த பிளவை பாஜக மேலிடம் சரிசெய்யவில்லை... எனவே, பாஜகவும், திமுகவும் சேர்ந்து தம்மை பழிவாங்குவதாக எடப்பாடி டீம் சந்தேகித்து வருகிறது.. அதற்கேற்றார் போல், குட்கா வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது திமுக.. அதிமுகவினர் பலர் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த வழக்குகளை திமுக அரசு, சிபிசிஐடி விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்க உள்ளது.. இதில், விஜயபாஸ்கருக்கு நிறைய சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் விஜயபாஸ்கரை மையமாக வைத்து எடப்பாடிக்கு செக் வைக்கிறதா அரசு என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்


அதேபோல, ஜெ.மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம், கடந்த மாதம் 27ம் தேதி தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தது.. இந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது வெளிப்படுத்தவில்லை.. ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதை பற்றி சொல்லும்போது, "அறிக்கையில் உள்ளவற்றை நான் இப்போது சொல்ல மாட்டேன்... சட்டசபையில் வைக்கப்பட்டு, அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதித்து நிறைவேற்றுவோம் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறோம்" என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

 ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைத்த பெயர்களில் விஜயபாஸ்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளதால், இது அவருக்கு கலக்கத்தை தந்து வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, அதில் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயர் இல்லை, ஓபிஎஸ் பெயர் இல்லையாம்.. அவர்கள் பெயர்கள் இல்லாமல் தன் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளதே என்று புலம்பி வருகிறாராம் விஜயபாஸ்கர்.. இதுபோன்ற அறிக்கையின் அடிப்படையில், தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அரசு மேல் விசாரணையை தொடர முடியும் என்பதாலும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உள்ளது என்பதாலும் கலங்கி உள்ளாராம் விஜயபாஸ்கர்.

 சீக்ரெட்+

சீக்ரெட்+

இதனிடையே, ஒரு பிரபல நாளிதழுக்கு பெங்களூர் புகழேந்தி இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.. அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "இளவரசி, ஓபிஎஸ். எல்லாம் ஆஜராகிய நிலையில், சசிகலா வராமல் போனதுதான் அவருக்கு மைனஸ் பாயிண்ட். ஆணையத்தில் நான் ஆஜராகி, 'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்' என எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொன்னேன். நான் கொடுத்த வாக்குமூலத்தை வலிமையானதாக எடுத்துக் கொண்டார் ஆறுமுகசாமி.

 ட்ரீட்மென்ட்

ட்ரீட்மென்ட்

சுகாதார அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில்தான் அப்பல்லோ மருத்துவமனை அன்று இருந்தது. அவர்தான் ஆதிக்கம் செலுத்தியவர்... ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், அப்பல்லோவில் நடந்த ரகசியங்கள் என அனைத்தையும் அறிந்த ஒரே நபர் விஜயபாஸ்கர்தான்... காரணம், மருத்துவ சிகிச்சை பற்றி சசிகலாவுக்கு என்ன தெரியும்? அவர் டாக்டர் இல்லையே! அதனால், ஆணையத்தின் பரிந்துரைகள்படி பார்த்தால் விஜயபாஸ்கர் சிக்குவது உறுதியாகிறது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+