சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தாரை வாழ வைக்கும் சென்னை.. இன்று கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிப்பு.. பலி எண்ணிக்கை கிடுகிடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 19 பேர் பலியாகிவிட்டனர். இவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் கொரோனா எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஜூன் 6 தேதிகளுக்குள் தமிழகத்தில் 7,819 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 1,077 முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் கடந்த 6 நாட்களில் தமிழகத்தில் 78 பேர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து நேற்று சுகாதாரத் துறை செய்திக்குறிப்பை வெளியிட்டது.

சென்னை ஹைகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று.. மூடப்பட்டது ஹைகோர்ட்சென்னை ஹைகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று.. மூடப்பட்டது ஹைகோர்ட்

கொரோனா

கொரோனா

அதில் தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து ரயில் மற்றும் விமானம் மூலம் வந்தவர்கள் 38 பேராவர். இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 19 பேர் பலியாகிவிட்டனர். அவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்களாகிவிட்டனர்.

மாரடைப்பு

மாரடைப்பு

இவர்களில் பெரும்பாலானோர் நுரையீரல் தொடர்பான நோய்களால் இறந்துள்ளனர். மேலும் மாரடைப்பு, கோவிட் நிமோனியா, நுரையீரல் கோளாறு, செப்டிக் ஷாக், வயிற்றில் உள்ள சிறிய பெரிடோனியம் திசுவில் ஏற்படும் அழற்சி காரணமாகவும், நாள்பட்ட சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றால் இறந்துள்ளனர்.

குறைவு

குறைவு

இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அதிகபட்சமாக ஒரு வாரங்களில் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானார் 50 வயதை கடந்தவர்களே. அதைவிட குறைவானர்கள் ஓரிருவர் மட்டுமே உள்ளனர். தற்போது ஊரடங்கில் பல தளர்வுகளை அளித்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஒரே நாளில் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு
    பல்கலைக்கழக ஆய்வு

    பல்கலைக்கழக ஆய்வு

    தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1.32 லட்சத்தை தாண்டும் என எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் ஜூலை 15-ஆம் தேதிக்குள் சென்னையில் 1.5 லட்சம் ஆகும் என்றும் கணித்துள்ளது. கொரோனா சமூக பரவல் நிலைக்கு சென்றுவிட்டதாகவே மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    English summary
    Tamilnadu coronavirus update: 19 died of coronavirus yesterday in a single day. All were belongs to Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X