வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 வரை அதிரடி உயர்வு.. பட்ஜெட்டுக்கு முன்பாக வணிகர்களுக்கு அதிர்ச்சி
சென்னை: இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் பட்ஜெட்டுக்கு முன்பாகவே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,899.50க்கு விற்பனையாகி வருகிறது.
2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். மொத்த நாடும் பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகளை எதிர்நோக்கி காத்துள்ளது.
ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை வரி சலுகை, தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆனால் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாகே கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகிறது.
வணிக சிலிண்டர் விலை உயர்வு
அந்த வகையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.1,849.50க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர் ஒன்றின் விலை இன்று முதல் ரூ.1,899.50க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.160 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹோட்டல், தாபா, சாலையோர உணவகங்கள், வணிக வளாக ரெஸ்டாரண்ட்டுகளில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை வியாபாரிகள் பயன்படுத்தி வருகினறனர். இதனல் அவர்களுக்கு இந்த செய்தி ஷாக்காக அமைந்துள்ளது.
டெல்லி - மும்பையில் எவ்வளவு?
அதேபோல் டெல்லியில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.49 அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,691.49 ல் இருந்து ரூ.1,740.50 ஆகவும், கொல்கத்தா மற்றும் மும்பையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.49.50 வரை உயர்ந்துள்ளது. இதனால் கொல்கத்தாவில் ஒரு சிலிண்டர் ரூ.1795ல் இருந்து ரூ.1,844.50 ஆகவும், மும்பையில் ரூ.1,642.50 ல் இருந்து ரூ.1,692 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
வீட்டு சிலிண்டரில் மாற்றமில்லை
இருப்பினும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் இன்று மாற்றம் செய்யப்படவில்லை. இது இல்லத்தரசிகளுக்கு ஓரளவு நிம்மதியை தந்துள்ளது. அதேவேளையில் இன்றைய தினம் விமானங்களுக்கான எரிபொருளான விமான எரிபொருளான ஏடிஎஃப்-இன் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளன.
விமான எரிபொருள் விலை உயர்வு
டெல்லியில், ஒரு கிலோலிட்டர் ஏடிஎஃப்-இன் விலை முந்தைய 778.85 டாலரில் இருந்து 778.85 டாலராக குறைந்துள்ளது. இதனால் இந்திய ரூபாயில், 1,000 லிட்டர் ஏடிஎஃப்-இன் விலை இப்போது ரூ. 91,393.39 ஆக இருக்கும், இது முந்தைய விலை ரூ. 92,323.02 உடன் ஒப்பிடும்போது குறைவாகும் சென்னையிலும் ஒரு கிலோலிட்டர் 774.26 டாலராக (இந்திய மதிப்பில் ரூ.84,781.99) ஆக இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications