1991க்கு பிறகு மீண்டும் கடுமையான அடி.. சென்னையில் திமுக காலி! சம்பவம் செய்த விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைப் பொறுத்தவரை திமுக, அதை தனது கோட்டையாக தக்க வைத்து வந்திருக்கிறது. ஆனால், இன்று அந்த கோட்டையில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், இந்த கோட்டையை உடைத்து நொறுக்கியிருக்கிறது.

குறிப்பாக கடந்த 1991 தேர்தலில் ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின் ஏற்பட்ட அலையில் திமுக மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டது போல, தற்போது தவெக-வின் எழுச்சி சென்னையில் திமுகவை காலி செய்திருக்கிறது.

Chennai

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சென்னையில் முழுமையான ஆதிக்கம் செலுத்தியிருந்தது. சென்னையின் 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வரலாற்றுச் சாதனை படைத்தது. 16/16 என கிளீன் ஸ்வீப் செய்திருந்தது. திமுக நேரடியாக 15 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் (வேளச்சேரி) ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றனர்.

அதேபோல, 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனது வெற்றியை பதிவு செய்திருந்தது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக தனது பிடியை மேலும் வலுப்படுத்தியது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் திமுக கூட்டணி 178 வார்டுகளைக் கைப்பற்றியது. திமுக மட்டும் தனித்து 153 வார்டுகள் வெற்றி பெற்றிருந்தது. அதிமுக வெறும் 15 வார்டுகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

2024 மக்களவைத் தேர்தலிலும் சென்னை திமுகவுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்திருந்தது. சென்னை வடக்கு, சென்னை மத்தியம், சென்னை தெற்கு ஆகிய 3 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் (கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன்) அமோக வெற்றி பெற்றனர்.

ஆனால், தற்போது சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் பல இடங்களில் முன்னிலை பெற்று திமுக-வை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியுள்ளது.

குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் தவெக வேட்பாளர் முன்னாள் திமுக நிர்வாகி வி.எஸ். பாபு முன்னிலையில் உள்ளார். இது தவிர சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தாலும், சேகர் பாபு (துறைமுகம்), மா. சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) போன்ற மூத்த அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 1991ல் ராஜீவ் காந்தி அலையில் திமுக மாநிலம் முழுவதும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. அதுவும் சென்னையின் எழும்பூர் மற்றும் துறைமுகத்தில் மட்டும்தான் ஜெயித்திருந்தது.

இப்போது தமிழக வெற்றி கழகத்தின் வருகை, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம், சென்னையில் திமுகவின் வெற்றியை முறியடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+