"டீல் ஓகே?".. அவங்க 2 பேரும் "இங்கே" வர போறாங்களாமே.. அப்ப ஸ்டாலின் சொன்னது இதைதானா.. ஸ்டன் ஆன பாஜக

விஜயகாந்த்தின் தேமுதிக, மநீம திமுகவுடன் கூட்டணி வைக்க நிறையவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் 2 புதிய கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் ஒன்று சுற்றி வருகிறது.. இது சம்பந்தப்பட்ட கட்சி தொண்டர்களிடம் உற்சாகத்தையும் பெருத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.. என்னவாம்?

2 நாட்களுக்கு முன்பு நடந்த திமுக மா.செ.கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகுந்த கவனத்தை, இன்னமும் பெற்று வருகிறது..

"கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்குங்கள். வலுவான கூட்டணியுடன்தான் நாம் போட்டியிடுவோம். கூட்டணி தொடர்பாக, தேர்தல் நேரத்தில் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார்.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின், எம்பி தேர்தல் பணி குறித்து பேசியதுடன், கூட்டணி பற்றியும் தைரியம் சொல்லி உள்ளதால், இது தொடர்பாக சில தகவல்கள் வட்டமடித்து வருகின்றன.. அதாவது, முதல்வர் ஸ்டாலின் பேசியதை பார்க்கும்போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் இப்போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் 2 கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள்.. குறிப்பாக, கமலின் மநீம, விஜயகாந்தின் தேமுதிக இரண்டு கட்சிகளும் கன்பார்ம்மாக திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

 1+2 சீட்

1+2 சீட்

இதில் மநீம பொறுத்தவரை, கடந்த சில தினங்களாகவே, அந்த கட்சி திமுகவுடன் இணைய போவதாக சொல்லப்பட்டு வருகிறதுடன், ஒருபடிமேலேபோய், எத்தனை சீட்டுக்கள், எந்த தொகுதிகள் என்பது உட்பட பல்வேறு விஷயங்கள்கூட கசிய தொடங்கிவிட்டன.. திமுக கூட்டணியில் கமல் இடம்பெறும்பட்சத்தில், ஒரு லோக்சபா தொகுதி + ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக திமுக தரப்பில் மய்யத்துக்கு உறுதி தரப்பட்டதாம்.. அதாவது, கமலை ஒருபக்கம் ராஜ்யசபாவுக்கு அனுப்பி, இன்னொரு பக்கம் பிரச்சாரத்துக்கும் அனுப்ப தன் பிளானை திமுக சொன்னதாக தெரிகிறது.

 2 லீடர்கள்

2 லீடர்கள்

மேலும், பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே களமிறக்க, திமுக தரப்பு திட்டமிட்டு வருவதாக சொல்கிறார்கள்.. கமலை இங்கு நிறுத்தினால், இந்த 2 தொகுதிகளிலும் நிச்சயம் பாஜகவை வீழ்த்தலாம் என்று திமுக கணக்கு போடுகிறதாம்.. ஆனால், இந்த 2 தொகுதிகளுக்கும் 2வின் தலைவர்கள் இப்போதே காய்நகர்த்த துவங்கி விட்டார்கள்.. கோவையில், அண்ணாமலையும், தென் சென்னையில் தமிழிசையும் போட்டியிட ஆர்வம் தெரிவித்து, அந்த ஆர்வத்தை அமித்ஷாவிடமே சொன்னதாகவும் தெரிகிறது.. ஆக, இந்த முறையும் பாஜகவை எதிர்கொள்ள கமல் ரெடியாகி வருவதாகவே கருதப்படுகிறது.

 குறி A

குறி A

ஆனால், திமுக கூட்டணியில் மநீம ஐக்கியமாகும் என்று உறுதியாக சொல்லப்படும் அளவுக்கு தேமுதிக பேசப்படாமலேயே இருந்தது.. இதற்கு காரணம், பாஜகவுடன் தேமுதிக மேலிட தரப்பு இணக்கமான நட்பை கொண்டுள்ளதுபோல, விஜயகாந்த் மீதும் பாஜக தலைவர்கள் பாசமாகவே இருக்கிறார்கள்.. ஆனால், இத்தனை வருடம் நல்லுறவு வைத்திருந்தும்கூட, அமைச்சர் பதவி என்பதை கடைசிவரை மத்திய பாஜக தரவில்லை.. இதனால் சலிப்படைந்த தேமுதிக, இதற்கு பேசாமல் திமுகவுடனேயே கூட்டணி வைக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம் என்கிறார்கள்.. இதே காரணத்தைதான், பாமகவுக்கும் சொல்கிறார்கள்.

 குறி B

குறி B

பாஜகவை இத்தனை காலமும் எதிர்பார்த்து, அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற பாமக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.. ஆனால், வாக்கு வங்கியை பிரதானமாக நிர்ணயிக்கக்கூடிய விசிக, திமுக கூட்டணியில் உள்ளதால், பாமகவை உள்ளே சேர்ப்பதில் திமுக தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.. இதுவே தேமுதிக என்றால் பிரச்சனை இல்லையாம்.. விஜயகாந்த் மீது அபரிமிதமான பாசத்தையும், நட்பையும் பேணி வருபவர் ஸ்டாலின்.. அந்தவகையில், அக்கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

 தங்கமனசு

தங்கமனசு

தேமுதிக தரப்பிலும் இந்த ஆர்வம் நிறையவே உள்ளது.. வலுவிழந்து போயுள்ள தேமுதிக, வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டால் தான், கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்க முடியும் என்று கட்சிக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறதாம்.. மேலும், தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் கட்சிக்கும் வரப்போகும் தேர்தல் ஒரு சவாலாக அமையும் என்கிறார்கள்.. எனவே, கூட்டணியில் இடம் பெற தூது விடும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையில் திமுக மேலிடமும் உள்ளதாம்.

 ஈரமனசு

ஈரமனசு

கமலை பொறுத்தவரை, கடந்த முறையே, திமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சு நடத்தப்பட்டதாகவும், ஆனால், கடைசி நேரத்தில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனதாகவும் சலசலக்கப்பட்டது.. அதனால்தான் இந்த முறை, 6 மாதத்துக்கு முன்பிருந்தே கூட்டணி தொடர்பான பேச்சு எழுந்து வருகிறது.. சீட் விவகாரங்களில் முன்னேபின்னே ஆகும் என்றாலும், கூட்டணி என்பதில் கமலே இந்த முறை உறுதியாக இருக்கிறாராம்.. தொகுதியும் சின்னமும் மட்டும் முடிவானால் போதும் என்கிறார்கள்.. உதயநிதியுடனான உறவும் சுமூகமாக இருந்து வருவதால், எல்லாமே சுபம் ஆகக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளதாம்.

சாயும் லீடர்கள்

சாயும் லீடர்கள்

இப்போது திமுக அமைக்க போவதே பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணி என்பதால், தேமுதிக அந்த புள்ளியில் நின்று இந்தகூட்டணியை பார்க்குமா? என்ற ஒரு சந்தேகம் உள்ளது.. காரணம், இதுவரை பாஜகவை தேமுதிக கடுமையாக விமர்சித்ததே கிடையாது.. மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை கண்டித்து பெரிய அளவில் போராட்டமும் இதுவரை நடத்தியதில்லை என்பதையும் மறுக்க முடியாது.. எனினும், தங்கள் கட்சியின் எதிர்காலம் என்று வருகிறபோது, இதெல்லாம் நொறுங்கி விழுந்து, நிலைப்பாடுகள் மாறலாம் என்கிறார்கள்.. ஒருவேளை இந்த தகவல்கள் எல்லாம் உண்மையானால், திமுகவுடன், கமலும், விஜயகாந்த்தும் முதல்முறையாக கூட்டணி வைப்பதுடன், எதிரணிகளுக்கும் கலக்கத்தை நிச்சயம் தருவார்கள் என்றே நம்பப்படுகிறது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+