"கிளைமாக்ஸ்" வந்தாச்சு.. ஆட்டத்தை முடித்து வைக்கும் "5 விவிஐபி".. சைக்கிள் கேப்பில் ஸ்லீப்பர் செல்?
எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் ஆதரவு குறைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: 5 முன்னாள்கள் மீது எடப்பாடி பழனிசாமிக்கு சந்தேகம் விழுந்துள்ளதாம்.. அவர்கள் குறித்த கவலையும், கலக்கமும், எடப்பாடியை சூழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தனிநீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு வந்தபோது, ஓபிஎஸ் சற்று குஷியாக இருந்தார்.. இதனால், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை, சசிகலாவை காட்டி தம்முடைய பக்கம் இழுத்துவிடலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டார்.
அதற்கேற்றபடி, ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றமும் சாதகமாகவே இருந்தன..இருந்தாலும், இறுதி உத்தரவு வந்துவிடட்டுமே, உங்களிடமே வந்துவிடுகிறோம் என்று எடப்பாடி தரப்பில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்..

அடடடே.. அப்செட்
இதனால், ஓபிஎஸ்ஸும் அவரிகளின் வருகைக்கு காத்திருந்தபோதுதான், ஹைகோர்ட்டின் இரு நீதிபதிகளின் அந்த உத்தரவு வந்துவிட்டது.. இதனால், ஓபிஎஸ் தரப்பில் அப்செட் ஆனார்கள்.. அணி மாற காத்திருந்த எம்எல்ஏக்களும் இப்போது வேண்டாம், சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து சைலண்ட் மோடுக்கும் சென்றுவிட்டனர். அந்தவகையில், ஓபிஎஸ் டீமுக்கு யாரும் இப்போதைக்கு வருவதுபோல தெரியவில்லை. இதுவும் எடப்பாடி டீமுக்கு குஷியை தந்தது.

ஐடியா - 1
எனவே, இன்னொரு ஐடியாவை ஓபிஎஸ் கையில் எடுக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.. எம்எல்ஏக்கள் வராவிட்டால் என்ன? கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களையும், அதிருப்தியில் உள்ளவர்களையும் தம் பக்கம் இழுத்து வந்து, அதன்மூலம் தன்னுடைய பலத்தை காட்டலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.. இவர்களை எல்லாம் கட்சியில் இருந்து அன்று நீக்கப்படும்போது, அந்த உத்தரவுக்கு எடப்பாடியுடன் சேர்ந்து கையெழுத்து போட்டதே ஓபிஎஸ்தான் என்றாலும், இப்போது வேறு வழியில்லாமல் இறங்கி வந்துள்ளார்.

ஐடியா - 2
யாரையெல்லாம் கையெழுத்து போட்டு, தூக்கினாரோ, அவர்களுக்கு எல்லாம் போனை போட்டு பேசி வருகிறாராம்.. இதில் எத்தனை பேர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்துள்ளார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், 4 முக்கிய புள்ளிகள் மீது எடப்பாடிக்கு சந்தேகம் வந்துள்ளது.. இதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. கடந்த 8ம் தேதி ஓணம் பண்டிகையன்று, எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமை அலுவலகம் வந்திருந்தார்.. அப்போது, கட்சி ஆபீசை விழுந்து விழுந்து கும்பிட்டார்.. ஜெயலலிதா ரூமுக்குள் சென்றபோதும், அங்கிருந்த அவரது சீட்டில் எடப்பாடி உட்காரவில்லை.. அங்கேயே தனியாக ஒரு சேர் போட்டு உட்கார்ந்தார்.

ஹாட் நியூஸ்
அந்த அளவுக்கு பவ்யமாகவும், தன்மையாகவும் அன்றைய நாள் நடந்து கொண்டார்.. தலைமை அலுவலகம் செல்லப்போவதாக ஒருநாள் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டு, மறுநாளே ஆபீசுக்கு வந்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.. அதனால், பல தலைவர்கள், நிர்வாகிகள், முக்கிய உறுப்பினர்கள் அன்றைய தினம் தலைமை ஆபீசுக்கு வந்திருந்தனர்.. குறிப்பாக, கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா ஆகியோர் எடப்பாடியை வந்து சந்தித்துள்ளனர்.

கறார் விஜயபாஸ்கர்
ஆனால், சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர், வளர்மதி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வரவில்லையாம்.. இதுதான் எடப்படி தரப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.. ஓஎஸ் மணியன் ஏற்கனவே கடுப்பில் இருக்கிறார்.. வழக்கு விசாரணை குறித்து தனக்கு எந்த சப்போர்ட்டும் செய்யவில்லை என்று விஜயபாஸ்கரும் வருத்தத்தில் இருக்கிறார்.. நாலாபக்கமும் எதிர்ப்புகளை சுமந்து சிவி சண்முகம் உள்ளார்.. இப்படி ஆளுக்கு ஒருபக்கம், ஒவ்வொரு காரணங்களினால் அதிருப்தியில் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன.

வெயிட் & சீ
முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் என எல்லாருமே தலைமை கழகம் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும், இவர்கள் மிஸ்ஸாகி இருந்தது, எடப்பாடி தரப்பிடையே அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் உண்டாக்கி வருகிறதாம்.. பொதுக்குழு உறுப்பினர்களில் 90க்கும் மேற்பட்ட ஆதரவு இருப்பதாக எடப்பாடி டீம் நம்பி உள்ள நிலையில், தற்போது இந்த நம்பிக்கையில் லேசான விரிசல் வந்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, "வெயிட் & சீ" என்று போகிற இடமெல்லாம் சசிகலா சொல்லி வருகிறார்.

பிளான்கள் சக்ஸஸ்?
எனவே, இவர்கள் எல்லாம் ஒருவேளை ஓபிஎஸ் டீம் பக்கம் போகிறார்களா? அல்லது சசிகலாவுக்கு ஆதரவு தரப்போகிறார்களா? என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.. எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவர்களது ஆதரவாளர்களுக்கு முறையான மரியாதை இல்லாமல் இருப்பதால்தான், இவர்கள் அலுவலகத்திற்கு அன்றைய தினம் வரவில்லை என்றும் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது.

2 + 2
அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக மேலிடம், இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை என்றாலும், அதிமுக சிதறிப்போய்விடக்கூடாது என்று நினைக்கிறது.. அதேசமயம், தங்களை நாடி வருபவர்களை அணைத்து கொள்ளவும் தயாராக உள்ளதாம்.. இதனிடையே, 2 கொங்கு மண்டல மாஜி அமைச்சர்களும், 2 தென்மண்டல மாஜி அமைச்சர்களும் சசிகலா தரப்புக்கு விரைவில் செல்லக்கூடும் என்றும் செய்திகள் கசிந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு டென்ஷன் எகிறி வருகிறது...

2000 பேர்
அதிருப்தியாளர்களுக்கு கட்டம் கட்ட முனைந்துள்ள ஓபிஎஸ், அதில் ஓரளவு வெற்றி பெற்று விட்டாரா? 2 ஆயிரம் ஆதரவாளர்களை தன்னுடைய சுற்றுப்பயணத்தில் ஓபிஎஸ் சந்திக்க போவதாக சொன்னது என்னவாயிற்று? சசிகலாவின் தற்போதைய சுற்றுப்பயணங்களில் சாதகங்கள் கூடி வருகின்றனவா? என்றெல்லாம் உறுதியாக தெரியவில்லை.. ஆனால், முன்பைவிட தற்போது அதிமுகவில் அனல் அதிகமாக அடிக்க தொடங்கிவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications