மின்வெட்டை தவிர்க்க.. தமிழகத்திற்கு கூடுதல் "பவர்.." ஸ்டாலின் முன்னிலையில் டான்ஜெட்கோ ஒப்பந்தம்
குறைந்த விலையில்2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை: என்எல்சி, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன், பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனங்களுடன் டான்ஜெட்கோ குறைந்த விலையில்2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) ஒப்பந்தம் மேற் கொண்டது.
என்எல்சி நிறுவனம் 800 மெகாவாட் திறன் கொண்ட 3 மின் உற்பத்திஅலகுகளை ஒடிசாவின் தலபிராவில் அமைக்கிறது. அதில் 11,500மெகாவாட் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2026-27-ல் உற்பத்தி தொடங்கும்.

என்எல்சியுடன் ஒப்பந்தம்
நிலக்கரி சுரங்கத்துக்கு அருகில்இருப்பதால் என்எல்சி, யூனிட்டுக்குரூ.3.06 கட்டணம் நிர்ணயித்துள்ளது. 2026-27 முதல் 1,500 மெகாவாட் மின்கொள்முதல் செய்வதுதொடர்பாக என்எல்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,டான்ஜெட்கோவுக்கு தனி நிலக்கரிசுரங்கம் ஒதுக்கப்படும் என்றும், 2,700 மெகாவாட் கூடுதல் மின்சாரம்தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 மெகாவாட் சூரிய மின்சக்தி
சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவன உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் கொள்கைபடி ஒரு யூனிட் ரூ.2.61 விலையில் 1,000 மெகாவாட் சூரிய மின் சக்தியை வாங்குவதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த மின்சாரம் 2022-23-ம் ஆண்டு இறுதியில் கிடைக்கும்.

1 யூனிட் ரூ. 3.26
இதேபோல, பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன், 4 நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின. இதன் மூலம் 24 மணி நேரமும் 400 மெகாவாட் மின்சாரம், ஒரு யூனிட் ரூ.3.26 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதன் ஒப்பந்தக் காலம் 3 ஆண்டுகள்.

லாபத்தில் பங்கு
தமிழ்நாடு பவர் லிமிடெட், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் என்எல்சி-ன்கூட்டு முயற்சி நிறுவனத்தில், 2 அலகுகளில் தலா 500 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழக மின் உற்பத்திக்கழகத்துக்கு 11 சதவீத பங்குகள்உள்ளன. 2021-22-ம் ஆண்டில் முதல் 9 மாதங்களுக்கான ரூ.182.01கோடி லாபத்தில், பங்கு ஈவுத்தொகையான ரூ.15.16 கோடிக்கானகாசோலையை முதல்வர் ஸ்டாலினிடம், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மத்திய நிலக்கரித் துறைச் செயலர் அனில்குமார் ஜெயின், எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications