2 ஆடி அமாவாசை வருது.. உடனே அந்த "ஜாக்பாட்டும்" வருது.. துள்ளி குதிக்கும் மக்கள்..அதென்ன பாரத் கௌரவ்
சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்றினை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தென்னக ரயில்வேயை பொறுத்தவரை மிகப்பெரிய நெட்வொர்க் ஆக செயல்பட்டு வருகிறது.. கோடிக்கணக்கான மக்கள் இந்த ரயில் பயணத்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

வாழ்க்கை தரம்: மக்களின் வாழ்க்கை தரத்துக்கு ஏற்றார்போல், ரயில்களில் ஏசி பெட்டி, 2ம் வகுப்பு, ரிசர்வேஷன் பெட்டி, முன்பதிவில்லா பெட்டி என இருக்கிறது. இந்நிலையில், நீண்டதூரம் பயணிக்கும் ரயில்களில் வருவாயை அதிகளவு ஈட்டும் நோக்கில், ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் யோசித்து வருகிறது.. இதற்காகலே 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை குறைத்துவிட்டு, மூன்றடுக்கு ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
ரயில்வே நிர்வாகம்: இப்படிப்பட்ட சூழலில்தான், தெற்கு ரயில்வே நிர்வாகம், தமிழ்நாடு, கேரளாவில் இருந்து நீண்டதூரத்திற்கு இயங்கும் 7 மேஜர் ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என்று 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.. இது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை தந்து வருகிறது..
நடுத்தர மக்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அப்படியானால் மூன்றடுக்கு ஏசி பெட்டியில்தான் பயணிக்க வேண்டுமா? இது சாதாரண கட்டத்தில் இருந்து 3 மடங்கு அதிகமாகிறதே? என்று கலங்கி சொல்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், தெற்கு ரயில்வே மற்றொரு அதிரடியை கையில் எடுத்து, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்தியோக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
கௌரவ் ரயில்: இந்த கௌரவ் சுற்றுலா ரயிலை பொறுத்தவரை, இதில் 3 ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் கோச்சுகள், ஒரு பான்ட்ரி கார், இரண்டு பவர் கார்கள் என்று மொத்தம் 14 பெட்டிகள் இருக்கிறதாம்.. ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டலம் சார்பில், ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற பெயரில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதில் பயணிகள் ஆடி அமாவாசையன்று, கயாவில் தங்கள் முன்னோர்களுக்கு பிண்ட தானம் செய்யும் வகையில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து தொடங்கி மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி திரிவேணி சங்கமம், அலகாபாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே: இந்த சுற்றுலா பயணம் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி 12 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் கட்டணம் 21,800 முதல் 39,100 ரூபாய் வரை ஒரு நபருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 750 பேர் இதில் பயணம் செய்யக்கூடிய வசதியும் இந்த ரயிலில் உள்ளது. மேலும் ஒவ்வொரு ஊரிலும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியும், பயணிகளின் தேர்வுக்கு ஏற்ப உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிற்காம் அறிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications