அதிரடி.. ஆவடியில் 26 காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்! குட்கா விற்பனையாளர்களால் சிக்கல்
சென்னை: குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கஞ்சா, போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க தொடர்ந்து போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை காவல் ஆணையர்கள், எஸ்பிக்கள் தங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுபுற மாவட்டங்களில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சில போலீசார் குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் குட்கா விற்பனையையை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவின்பேரில் ஆவடி போலீஸ் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 போலீசார் குட்கா விற்பனையாளர்களுடன் சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 2 உதவி ஆய்வாளர்கள், 24 போலீசார் என மொத்தம் 26 பேரையும் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதோடு குட்கா விற்பனை செய்பவர்கள், அதற்கு துணை புரியும் காவலர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications