பீச்சுக்கு போகலாமா.. 14 வயது சிறுமிகளை.. கடத்தி.. தாலி கட்டி.. 2 இளைஞர்களை கொத்தோடு அள்ளிய போலீஸ்!
2 சிறுமிகளை கடத்திய 2 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்
சென்னை: பீச்சுக்கு போலாமா.. சினிமாவுக்கு போலாமா.. என்று 14 வயது சிறுமிகளிடம் கேட்டு.. அவர்களை ஏமாற்றி.. கடத்தி சென்று கோயிலில் வைத்து தாலியும் கட்டி.. லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர் 2 இளைஞர்கள்.. அவர்களை போலீசார் கொத்தோடு அள்ளிக் கொண்டு ஸ்டேஷனில் வைத்துவிட்டனர்.
சென்னை கண்ணகிநகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.. 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள் 3 தோழிகள்.. இருவரும் சரியாக படிக்கவில்லை போல தெரிகிறது.. மார்க்கும் குறைவாகவே எடுத்துள்ளனர்!
அதனால் டீச்சர்கள்3 மாணவிகளையும் திட்டிஉள்ளனர்.. மறுநாள் கிளாஸ்-க்கு வரும்போது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்று கறாராக சொல்லிவிடவும், 3 தோழிகளும் பயந்து நடுங்கி விட்டனர்.

யூனிபார்ம்
பெற்றோருக்கு விஷயம் தெரிந்தால், தொலைத்துவிடுவார்கள் என்று 3 பேருமே வீட்டில் எதுவுமே சொல்லவில்லை. மறுநாள், யூனிபார்மை போட்டுக் கொண்ட 3 பேரும் கிளாசுக்கு போகாமல், ஸ்கூல் பக்கமாகவே சுற்றி வந்துள்ளனர். இதை அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த கனகராஜ், விஜயக்குமார் 2 பேரும் கவனித்தனர்.

பீச்சில் விளையாட்டு
அந்த 3 மாணவிகளிடம் சென்று நைசாக பேச்சு தந்தனர்.. கொஞ்ச நேரத்தில் கலகலவென பிள்ளைகள் பேசவும், டிரைவர்கள் கணக்கு வேறு மாதிரியாக போனது. "பக்கத்தில் இருக்கிற பீச்சுக்கு போலாமா.." என்று கேட்டு பீச்சுக்கு மாணவிகளை அதே ஆட்டோவில் உட்கார வைத்து கூட்டி சென்றிருக்கிறார்கள்.. 3 பிள்ளைகளும் பீச்சில் விளையாடி உள்ளனர். பிறகு, ஸ்கூல் முடியும் நேரம் ஆனதும், 3 பேரையும் வீட்டு பக்கம் இறக்கி விட்டுட்டு வந்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர்கள்
திரும்பவும் மறுநாளும் இப்படியே யூனிபார்ம் போட்டுக் கொண்டு வெளியே வந்த மாணவிகளை, சினிமாவுக்கு போகலாமா என்று கேட்டு 2 ஆட்டோ டிரைவர்களும் கூட்டிச் சென்றுள்ளனர். 2 நாளாக ஸ்கூல் போகவில்லையே, வீட்டில் சொல்லி விட்டால் என்னாவது என்று மாணவிகள் அவர்களுக்குள் பயந்து பேசி உள்ளனர். இதை கேட்ட ஆட்டோ டிரைவர்கள், "நாம வெளியூர் போயிடலாம்.. கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஜாலியா இருக்கலாம்" என்று அவர்களின் மனதை மாற்றி உள்ளனர்.

போலீசார்
இதில் 3 மாணவிகளில் 2 பேர் அந்த ஆட்டோ டிரைவர்களுடன் கிளம்பி சென்றுவிட்டனர். இந்த சமயத்தில் ஸ்கூலுக்கு போன 2 மாணவிகளை காணோம் என்று பெற்றோர், கண்ணகி நகர் ஸ்டேஷனில் புகார் செய்யவும், போலீசார் துரிதமாக இந்த விஷயத்தில் இறங்கினர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை ஆரம்பமானது. 2 மாணவிகளுடன் 2 நாளாக சுற்றித்திரிந்த மாணவியிடம் கேட்கவும்தான், எல்லா விஷயத்தையும் சொல்லி உள்ளார்.

லாட்ஜ்
பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தால், ஆட்டோ டிரைவர்கள் 2 மாணவிகளை ஏற்றி கொண்டு போனது தெரியவந்தது. அதையடுத்து, செல்போன் சிக்னலை வைத்து, பின் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த சமயத்தில், 2 சிறுமிகளையும், கும்பகோணம் அழைத்துச் சென்ற ஆட்டோக்காரர்கள் கோயிலில் வைத்து தாலி கட்டி, அங்கிருந்து திருப்பூர் கூட்டிச் சென்று ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர்.

போக்சோ
அதற்குள் போலீசார் டிரேஸ் செய்து பின்னாடியே வந்துவிட்டனர்.. லாட்ஜில் இருந்த 2 டிரைவர்களையும் கைது செய்து, சிறுமிகளையும் மீட்டனர். ஒரு டிரைவர் பெயர் விஜயகுமார், 19 வயதுதான் ஆகிறது.. இன்னொரு டிரைவர் பெயர் கனகராஜ், 25 வயதாகிறது.. இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. லாட்ஜில் ரூம் போட்டு சிறுமிகளை பலாத்காரமும் செய்த, 2 டிரைவரையும் போக்சோவில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications