வாட்ஸ் ஆப்பில் விபச்சாரம்.. அம்பத்தூரில் 17 வயது சிறுமி, இளம் பெண்களை அடைத்து வைத்து கொடுமை
சென்னை: சென்னை அம்பத்தூரில் சிறுமி உள்பட பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அருகே குடியிருப்பு பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறு வேடத்தில் அந்த இடத்திற்கு போலீஸார் சென்றனர்.
மேலும் அங்கு நிறைய ஆண்கள் வந்து வந்து போவதையும் பாலியல் தொழில் நடப்பதையும் போலீஸார் உறுதி செய்து கொண்டனர். இதையடுத்து அந்த இடத்தில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காவல் துறையினர் நடத்திய சோதனையில் அந்த குடியிருப்பு பகுதியில் 25 வயது மதிப்பிலான இரு இளம் பெண்கள், 17 வயது சிறுமி ஆகியோரை போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த லிங்கம் ஆகிய இரு தரகர்களை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமி மற்றும் இரு பெண்களை அந்த வீட்டில் அடைத்து வைத்து கைதான இருவரும் பாலியல் தொழில் செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ரமேஷ் மற்றும் லிங்கம் ஆகிய இருவரையும் அம்பத்தூர் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இருவர் மட்டும் இந்த பாலியல் தொழிலை செய்யவில்லை என்பதை போலீஸார் அறிந்தனர். பிறகு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தொலைபேசி உரையாடல் மூலம் கண்டுபிடித்தனர். வாட்ஸ் ஆப் குழுவை தொடங்கி பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.
அந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் பெண்களின் புகைப்படங்களை பகிர்ந்து வாடிக்கையாளர்களை வரவழைக்க புரோக்கர்கள் சிலர் இருந்தது தெரியவந்தது. ரமேஷும், லிங்கமும் பாலியல் தொழில் செய்து வரும் புரோக்கர்களிடம் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் புரோக்கர்களாக அய்யா குட்டி, வீர மனோகர், மீரான் ராஜா, நாகேந்திரன் , முத்து நாதன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது விபச்சார வழக்கும் போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெண்களையும் சிறுமியையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். வாட்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெண்களின் புகைப்படம் அனுப்பி வைக்கப்படும்.
ரேட் மட்டும் யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு தனியே அனுப்பப்படும். ஒரு வேளை அந்த பெண்ணை பிடித்திருக்கிறது என வாடிக்கையாளர் கூறினால் மட்டுமே அவருக்கு பாலியல் தொழில் நடைபெறும் இடம் பகிரப்படும் . புரோக்கர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படுகிறது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications