சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள்.. நடிகை பவுலின் தீபாவின் வீட்டுக்கு பரபரப்பாக ஓடி வரும் ஆண் யார்?
சென்னை: நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாளன்று ஆட்டோவில் இருந்து சோர்வாக இறங்கி வீட்டுக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்கிற தீபா. இவருக்கு 29 வயது. இவர் சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
இவர் வாய்தா, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். வாய்தாவில் கதாநாயகியாகவும் வேறு சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

காதல்
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். அதில் தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும் அந்த காதலை அந்த நபர் ஏற்கவில்லை என்றும் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டிருந்தார்.

சாவில் மர்மம்
ஆனால் பவுலினின் சகோதரர் தினேஷ், இவரது சாவில் மர்மம் உள்ளதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பவுலினின் 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவரது காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு
ஆனால் அவர் படப்பிடிப்பில் இருப்பதால் ஆஜராக நேரம் கேட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பவுலின், சிராஜுதீனிடம் போனில் வாக்குவாதம் செய்ததாகவும் தான் தற்கொலை செய்ய போவதாகவும் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நடிகை பவுலின் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் வெளியே சென்றுவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி சோர்வாகவே வீட்டுக்குள் செல்கிிறார்.

சிசிடிவி காட்சி
இந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். அது போல் பவுலின் தற்கொலை செய்து கொண்டதை சிராஜுதீன் மூலம் அறியும் அவரது நண்பர் பிரபாகரன் பவுலினின் வீட்டிற்கு பதற்றமாக ஓடி வரும் சிசிடிவி காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. பவுலின் காதலித்து வந்ததாக சொல்லப்படும் சிராஜுதீனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த விவகாரத்தில் சிராஜுதீனின் நண்பர் பிரபாகரன் மீதும் போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications