பூட்டிக் கிடந்த நிறுவனத்தில் அழுகிய நிலையில் இரு சடலங்கள்.. பெண் பலாத்கார கொலை? என விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குன்றத்தூர் அருகே இரண்டு ஆண்டுகளாக மூடியே கிடக்கும் நிறுவனத்தின் கழிவறைகளில் அழுகிய நிலையில் முற்றிலும் சிதிலமடைந்த ஆண், பெண் ஒருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சிட்கோவில் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கு செயல்பட்டு வந்த நிறுவனம் ஒன்று தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது.

அந்த நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக செயல்படாத நிலையில் அங்கு பாதுகாப்பு பணிக்கு காவலாளி மட்டும் ஒருவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்றைய அந்த அந்த கம்பெனியில் ஒரு பகுதியில் உள்ள பணியை மேற்கொள்வதற்காக மேலாளர் வேலையாட்களுடன் வந்தார்.

துர்நாற்றம்

துர்நாற்றம்

அப்போது நிறுவனத்தின் மூன்றாவது மாடியில் சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியது. மேலும் அங்கு பார்த்த போது ஒரு கழிவறையில் ஒரு சடலமும் மற்றொரு கழிவறையில் மற்றொரு சடலமும் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குன்றத்தூர்

குன்றத்தூர்

தகவல் அறிந்து போரூர் உதவி கமிஷனர் பழனி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் சிதிலமடைந்து கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தது 22 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என்பது தெரியவந்தது.

மற்றொரு கழிவறை

மற்றொரு கழிவறை

ஆண் ஒரு கழிவறையிலும், பெண் மற்றொரு கழிவறையிலும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது உடல் முழுவதும் அழுகி இருப்பதால் இறந்து கிடந்தவர்கள் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. மேலும் இறந்து போனவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? அல்லது வட மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இரவு நேரங்கள்

இரவு நேரங்கள்

இந்த கம்பெனியில் தீ விபத்தில் ஏற்பட்டதில் இருந்து இரவு நேரங்களில் சிலர் இந்த கம்பெனியில் உள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்றது தெரியவந்தது. மூடிக் கிடக்கும் கம்பெனிக்குள் இருவரும் உல்லாசமாக இருக்கும்போது கம்பிகளை திருட வந்தவர்கள், அந்த வாலிபரை கொலை செய்துவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? அல்லது இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸார் விசாரணை

போலீஸார் விசாரணை

மேலும் காணாமல் போனவர்கள் குறித்த பட்டியலை சேகரித்து அதில் யாராவது இறந்து போனவர்கள் வயதில் உள்ளார்களா? என பல்வேறு கோணங்களில் அங்கு பணிபுரியும் காவலாளி மற்றும் பக்கத்து கம்பெனிகளில் வேலை செய்பவர்களிடம் குன்றத்தூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தீ விபத்தில் சிதிலமடைந்த கம்பெனியில் இரண்டு கழிவறைகளில் ஆண், பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+