தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராச்சே.. பொன்முடி மகன் காரில் சிக்கிய 2 ஆவணங்கள்! அசோக் சிகாமணி யார்?
சென்னை: அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணியின் காரில் 2 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அன்று நள்ளிரவே அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராகவும், திமுகவின் மூத்த தலைவராகவும் இருக்கும் பொன்முடி மீது கடந்த 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இன்று சோதனையை தொடங்கி உள்ளார்கள். செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கு அது.
அதன் பேரில் பொன்முடி மற்றும் மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம சிகாமணி, அவரது இளைய மகன் அசோக் சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
துணை ராணுவப் படை பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணியின் அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, அசோக் சிகாமணியின் மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சோதனை தொடங்கும்போது அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோரும் வீட்டீலேயே இருந்து உள்ளனர். அவர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வைத்தே தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
14 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பணம், 10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த முழு தகவலும் கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றனர். இதற்கிடையே வீட்டில் நடைபெற்ற விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியிடம் மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் அவரது 2 வது மகன் அசோக் சிகாமணியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள். அந்த சோதனையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அசோக் சிகாமணியின் காரில் 2 முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். தமிழ்நாடு கிரிக்கெட் அணி, சேப்பாக்கம் மைதானம், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் என தமிழ்நாடு கிரிக்கெட்டில் நடக்கும் அனைத்துமே அவரது தலைமையில்தான் இயங்கி வருகிறது.
இந்த சூழலில் அவரது காரில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அசோக் சிகாமணி மருத்துவராவார். இவருக்கு சொந்தமாக மருத்துவமனையும் உள்ளது. அங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications